பௌரி

ஆள்கூறுகள்: 30°09′N 78°47′E / 30.15°N 78.78°E / 30.15; 78.78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பௌரி
நகரம்
பௌரி நகரத்திலிருந்து மேற்கு இமயமலையின் கங்கோத்ரி மலைகளின் காட்சி
பௌரி நகரத்திலிருந்து மேற்கு இமயமலையின் கங்கோத்ரி மலைகளின் காட்சி
அடைபெயர்(கள்): கார்வால்
பௌரி is located in உத்தராகண்டம்
பௌரி
பௌரி
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பௌரி கார்வால் மாவட்டத்தில் பௌரி நகரத்தின் அமைவிடம்
பௌரி is located in இந்தியா
பௌரி
பௌரி
பௌரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°09′N 78°47′E / 30.15°N 78.78°E / 30.15; 78.78
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்பௌரி கார்வால்
அரசு
 • நிர்வாகம்NPP
ஏற்றம்1,814 m (5,951 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்25,440
இனங்கள்கார்வாலி மக்கள்
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்246001
தொலைபேசி குறியிடு+91-1368
வாகனப் பதிவுUK-12
இணையதளம்pauri.nic.in

பௌரி (Pauri) இந்தியாவின் வடக்கில் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள பௌரி கார்வால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

புவியியல்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து 1814 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமைந்த பௌரி நகரம் 30°09′N 78°47′E / 30.15°N 78.78°E / 30.15; 78.78 பாகையில் அமைந்துள்ளது.[1]

தட்பவெப்பம்[தொகு]

குளிர்காலத்தில் சனவரி முதல் பிப்ரவரி வரை இந்நகரத்தில் பனிப்பொழிவு ஏற்படும். பொதுவாக ஆண்டு முழுவதும் அதிக வெயில் இன்றி காணப்படும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6,127 வீடுகள் கொண்ட பௌரி நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 25,440 ஆகும்.[2] அதில் ஆண்கள் 13,090 மற்றும் பெண்கள் 12,350 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2766 (10.87%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.18% ஆக உள்ளது. As of 2001 India census,[3] இந்நகரத்தின் மக்கள் உள்ளூர் மொழியான கார்வாலி மொழியை பேசுகின்றனர்.

கல்வி[தொகு]

  • அரசு கோவிந்த் வல்லபந்த் பொறியியல் கல்லூரி
  • ஹேமாவதி நந்தன் பகுகுணா மத்தியப் பல்கலைக்கழகத்தின் (Hemwati Nandan Bahuguna Central University) ஒரு வளாகம் பௌரிக்கு அருகே சிறீநகரில் உள்ளது.
  • புனித தாமஸ் மேனிலை பள்ளி
  • மெஸ்மோர் இடைநிலைக் கல்லூரி (Messmore Inter College)
  • டி. ஏ. வி இடைநிலைக் கல்லூரி (DAV Inter College)
  • சிறீ குரு ராம் ராய் பொதுப்பள்ளி (Sri Guru Ram Rai Public School)
  • அரசு இடைநிலைக் கல்லூரி
  • அரசு மகளிர் இடைநிலைக் கல்லூரி
Himalaya Panorama From Pauri
பௌரி நகரத்திலிருந்து இமயமலையின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பௌரி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌரி&oldid=3027007" இருந்து மீள்விக்கப்பட்டது