நந்த குந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்த குந்தி மலை
Nandaghunti mountain.jpg
உயர்ந்த இடம்
உயரம்6,309 m (20,699 ft)
பட்டியல்கள்மலை
ஆள்கூறு30°20′58″N 79°42′58″E / 30.34944°N 79.71611°E / 30.34944; 79.71611ஆள்கூறுகள்: 30°20′58″N 79°42′58″E / 30.34944°N 79.71611°E / 30.34944; 79.71611
புவியியல்
நந்த குந்தி மலை is located in இந்தியா
நந்த குந்தி மலை
நந்த குந்தி மலை
அமைவிடம்கார்வால் கோட்டம், சமோலி மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
மலைத்தொடர்இமயமலைகள்
Climbing
First ascent1947

நந்த குந்தி (Nanda Ghunti) 6,309 மீட்டர்கள் (20,699 ft) இந்தியாவின் வடக்கில் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள சமோலி மாவட்டத்தின் இமயமலைப் பகுதியில் 6309 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நந்ததேவி தேசியப் பூங்காவிற்கு வெளியே அமைந்துள்ளது. இந்த மலையடிவாரத்தில் எலும்புக் கூடுகள் நிறைந்த, மர்ம ஏரியான ரூப் குண்டம் அமைந்துள்ளது.

1907-இல் நந்த குந்தி மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து, டாம் ஜார்ஜ் லாங்ஸ்டாப் என்ற என்ற பிரித்தானிய நில அளவையரால் முதலில் நில அளவை செய்யப்பட்டது. 1931-இல் எரிக் சிப்டன் என்பரால் இம்மலையின் மேற்கு பகுதியிலிருந்து நில அளவை செய்யப்பட்டது. 1944-இல் பி. ஆர். குட்பெல்லோ மற்றும் ஜெ. பஸ்சர்டு என்பவர்களால் நந்த குந்தி மலைக் கொடுமுடியில் ஏறிச் சாதனை செய்தனர். இறுதியாக இம்மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் ஆண்ட்ரூ ரோச் குழுவினரால் இம்மலையின் கொடுமுடியில் ஏறி சாதனை செய்தனர். 22 அக்டோபர் 1960-இல் சுகுமார் ராய் தலைமையிலான இந்தியர்கள் இம்மலையின் கொடிமுடியில் ஏறி சாதனை படைந்த்தனர். ரூப் குண்டத்திலிருந்து நந்த குந்தி மற்றும் திரிசூலி மலைகளின் கொடுமுடிகளை நன்கு காணலாம். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Himalayan Association Journal, Vol-VII, pg. 44
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்த_குந்தி&oldid=3027165" இருந்து மீள்விக்கப்பட்டது