ராஜாஜி தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 30°03′29″N 78°10′22″E / 30.05806°N 78.17278°E / 30.05806; 78.17278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜாஜி தேசியப் பூங்கா
ராஜாஜி தேசியப் பூங்காவின் முகவாயில்
Map showing the location of ராஜாஜி தேசியப் பூங்கா
Map showing the location of ராஜாஜி தேசியப் பூங்கா
Map showing the location of ராஜாஜி தேசியப் பூங்கா
Map showing the location of ராஜாஜி தேசியப் பூங்கா
அமைவிடம்உத்தராகண்ட், இந்தியா
அருகாமை நகரம்அரித்துவார் மற்றும் டேராடூன்]
ஆள்கூறுகள்30°03′29″N 78°10′22″E / 30.05806°N 78.17278°E / 30.05806; 78.17278
பரப்பளவு820.5 km2 (316.8 sq mi)
நிறுவப்பட்டது1983
நிருவாக அமைப்புமுதன்மை வனப்பாதுகாப்பு அலுவலகம், உத்தராகண்ட்
வலைத்தளம்junglesafarirajajinationalpark.com

ராஜாஜி தேசியப் பூங்கா (Rajaji National Park) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரம் அருகே உள்ள சிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ள தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் ஆகும்[1]. உத்தராகண்ட் மாநிலத்தின் அரித்துவார், டேராடூன், பௌரி கர்வால் ஆகிய மாவட்டங்களில் 820 கி.மீ2 பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. சில்லா, மொட்டிச்சூர், ராஜாஜி ஆகிய மூன்று வன உயிரியல் சரணாலயங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு ஒரே பூங்காவாக இராஜாஜி தேசியப் பூங்கா என மாற்றப்பட்டது [2]. சுதந்திர இந்தியாவின் இரண்டாவது மற்றும் கடைசி தலைமை ஆளுனராக இருந்தவரும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை (1954) முதன் முதலாகப் பெற்றவருமான ராஜாஜி என்றழைக்கப்படும் சி. இராஜகோபாலாச்சாரி அவர்களின் நினைவாக இப்பூங்காவுக்கு ராஜாஜி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புலிகள் காப்பக தகுதி[தொகு]

கர்நாடகாவின் குதிரைமுகம் (Kudremukh) மற்றும் உத்தராகண்டின் ராஜாஜி ஆகிய இரண்டு சரணாலயங்களையும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் புலிகள் காப்பகங்களாக தரம் உயர்த்தப்பட்டு இந்திய அரசின் வனத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டன[3]. இராஜாஜி தேசியப் பூங்கா உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது புலிகள் காப்பகமாகும் [4][5].

தாவரவளம்[தொகு]

ராஜாஜி தேசியப்பூங்கா சிவாலிக் மலைத்தொடருக்கும் இந்திய கங்கைச் சமவெளிக்கும் இடையில் அமைந்துள்ளது. அகன்ற இலையுதிர் காடுகள், ஆற்றங்கரையோரம் வளரும் மரவகைகள், புல்வெளிகள் மற்றும் ஊசியிலைக் காடுகள் ஆகியவை இந்த பூங்காவில் தாவரங்களின் பரப்பளவை உருவாக்குகின்றன. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வன உயிரினங்கள் வாழ்கின்றன. வேறுபட்ட இட அமைப்பியலால் பல்வேறு பட்ட விலங்கினங்கள் வசிக்க ஏற்ற வகையில் இப்பூங்கா அமைந்துள்ளது. குரங்குமஞ்சணாறி (Mallotus philippensis), சரக்கொன்றை மரம் (cassia fistula), சாலமரம் (Shorea robusta), பலாசமரம் (Butea monosperma), வெள்ளை மருது (Terminalia arjuna), மூங்கில் (Dendrocalamus strictus),இலவ மரம் (Bombax ceiba), குருவிஞ்சி மரம் (chamaror Ehretia), சந்தன மரம் , நெல்லிமரம் (Phyllanthus emblica) , இலந்தை மரம் (Ziziphus mauritiana) , வில்வம் (Aegle marmelos) உள்ளிட்ட மரவகைகள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.

விலங்குவளம்[தொகு]

இப்பூங்காவில் அடர்ந்த வனங்கள் காணப்படுவதால் அதிக அளவிலான விலங்குகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது. இப்பூங்கா யானைகள் மற்றும் புலிகள் வாழிடப் பரவலின் இந்தியாவின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஆசிய யானைகளுக்குப் பெயர் பெற்றது. மேலும் மலை ஆடுகள், வரையாடு போன்று தோற்றமளிக்கும் பாலூட்டி இனங்களும் ஊசியிலைக்காடகளின் மலைச்சரிவுகளில் வசிக்கின்றன.மிகப்பெரிய அளவிலான புள்ளிமான் மந்தைகளும் இங்கு வசிக்கின்றன. சாம்பார் மான், கேளையாடு (barking deer) குள்ள மான்,சிறு கொம்புடைய மான்வகை (nilgai), பன்றி மான், காட்டுப் பன்றிகள் மற்றும் தேனுண்ணுங் கரடி ஆகியவை இந்த காடுகளில் வசிக்கின்றன.புலி மற்றும் சிறுத்தை ஆகிய இரண்டும் இப்பூங்காவின் முக்கியக் கொன்றுண்ணிகளாகும்.சிறுத்தைப் பூனை, காட்டுப் பூனை, புனுகுப்பூனை (civet) மற்றும் மஞ்சள் கீரி போன்றவை மற்ற புலால் உண்ணி விலங்குகளாகும். குள்ளநரி மற்றும் வங்காள நரி போன்ற பாலூட்டிகள், இமயமலை கருப்பு கரடி (இதனை பூங்காவின் உயரமான மலைப்பகுதிகளில் பார்க்க முடியும்) போன்ற பாலூட்டிகளும் காணப்படுகின்றன.

பூங்காவில் காணப்படும் பிற காட்டு விலங்குகள்[தொகு]

இப்பூங்காவில் 315 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் இப்பூங்காவை சுற்றிய பரந்தநிலப்பகுதியில் வாழும் பறவைகள் மற்றும் இடம்பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் அனைத்தையும் சேர்த்து சுமார் 500 பறவை இனங்கள் இங்கு வசிக்கின்றன.இதில் கழுகுகள், மரங்கொத்தி, மீன்கொத்தி, குக்குறுவான் உள்ளிட்ட பறவையினங்களும் அடங்கும் [6].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://projecttiger.nic.in/News/25_Newsdetails.aspx
  2. Rajaji Official website of அரித்துவார்.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-01. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
  4. http://hillpost.in/2015/04/rajaji-becomes-second-tiger-reserve-in-uttarakhand/103025/
  5. http://www.thehindu.com/news/national/other-states/rajaji-park-notified-as-tiger-reserve/article7120327.ece
  6. Joshi, Ritesh. "The Return of the Nature’s Guard: Endangered Vulture’s Population on Rise in Rajaji National Park, North India". International Journal of Environmental Protection 2 (8): 1. http://www.ij-ep.org/paperInfo.aspx?PaperID=941. பார்த்த நாள்: 2 August 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாஜி_தேசியப்_பூங்கா&oldid=3734840" இலிருந்து மீள்விக்கப்பட்டது