உள்ளடக்கத்துக்குச் செல்

ரூப் குண்டம்

ஆள்கூறுகள்: 30°15′44″N 79°43′54″E / 30.26222°N 79.73167°E / 30.26222; 79.73167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூப் குண்டம் ஏரி
 • மர்ம ஏரி
 • எலும்புக் கூடு ஏரி
ரூப் குண்ட ஏரி, ஆகஸ்டு 2014
ரூப் குண்டம் ஏரி is located in உத்தராகண்டம்
ரூப் குண்டம் ஏரி
ரூப் குண்டம் ஏரி
ரூப் குண்டம் ஏரி is located in இந்தியா
ரூப் குண்டம் ஏரி
ரூப் குண்டம் ஏரி
அமைவிடம்சமோலி மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
ஆள்கூறுகள்30°15′44″N 79°43′54″E / 30.26222°N 79.73167°E / 30.26222; 79.73167
சராசரி ஆழம்2 மீட்டர்கள் (6 அடி 7 அங்)
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,800 மீட்டர்கள் (15,700 அடி)

ரூப் குண்டம் (Roopkund) இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் சமோலி மாவட்டத்தின் வடக்கில இமயமலையின் பனி சூழ்ந்த நந்த குந்தி மலை மற்றும் திரிசூலி மலையடிவாரத்திற்கு இடையே, கடல் மட்டத்திலிருந்து 16,470 அடிகள் (5,020 m) உயரத்தில் அமைந்த ஏரி ஆகும்.[1] இந்த ஏரியைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளூர் மக்கள் இந்த ரூப் குண்டம் ஏரியை மர்ம ஏரி அல்லது எலும்புக் கூடு ஏரி என்பர்.[2]

3 மீட்டர் ஆழம் கொண்ட ரூப் குண்ட் ஏரியில் காணப்படும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகளால் அறியப்படுகிறது.[3] [4][5]ஏரியில் பனி உருகி பிறகு மனித எலும்புக் கூடுகள் தெளிவாக காணமுடிகிறது.[6]

9-ஆம் நூற்றாண்டில் திரிசூல மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிரமான பனிப்புயலில் சிக்கி இறந்து போன மக்கள் கூட்டத்தவர்களின் எலும்புக் கூடுகள் எனச் செவிவழிக் கதையாக காலம்தோறும் கூறப்படுகிறது.[7] அதனால் ரூப் குண்ட் ஏரியை மனித எலும்புக் கூடு ஏரி என அழைக்கப்படுகிறது.[8]

பனி நீங்கி உலர்ந்த ரூப் குண்டம் ஏரியில் மனித எலும்புக் கூடுகள்

ரூப் குண்ட் எரியின் பனி உருகிய போது, நந்தா தேவி தேசியப் பூங்காவின் வனச்சரகர் 1942-இல் ஏரியில் மனித எலும்புக் கூடுகள் இருப்பதை முதலில் அறிந்து, அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு செய்தி தெரிவித்தார். ஆனால் பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள், இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானியப் படைவீரர்களால் கொல்லப்பட்டவர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் எனக்கருதினர். [7]ஏரியின் பனிகட்டிகள் உருகி, நீர் தெளிந்த பின்னர் இந்த மனித எலும்புக் கூடுகளுடன், இரும்பு ஈட்டிகள், தோல் காலணிகள்[9] மற்றும் விரல் மோதிரங்கள் நன்கு வெளியே தெரிகிறது. 2003-ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிரபிக் குழுவினர் இந்த ஏரியிலிருந்து 30 எலும்புக் கூடுகளை மீட்டெடுத்தபோது, அவற்றின் சில எலும்புக் கூடுகளின் சதை இன்னும் ஒட்டியிருந்தது தெரியவந்தது.[2]

அடையாளம் காணல்

[தொகு]

1950-இல் இந்திய மானிடவியல் ஆய்வகம், ரூப் குண்டம் ஏரியில் கிடைந்த 300 மனித எலும்புக் கூடுகளை ஆய்வு செய்தனர். அதில் சிலமாதிரிகளை தேராதூனில் உள்ள இந்திய மானிடவியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.[10] ஆய்வின் போது சில மண்டையோடுகளில் காயங்கள் இருப்ப்பதை கண்டனர்.[11][12]உள்ளூர் மக்களின் வட்டார வழக்கு பாடல்களில் கூறியுள்ளவாறு, இக்கூட்டத்தினர் தீவிர பனிப்புயலில் சிக்கி இறந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [7][12] [13]

மேலும் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு சோதனையில் எலும்புக்கூடுகளின் காலம் கிபி 850 ±30 ஆக இருக்கலாம் எனத்தெரியவருகிறது. அண்மைய மரபணுத்தொகை ஆய்வுகளில், இந்த ஏரியில் இறந்து எலும்புக் கூடானவர்கள் பல வேறுபட்ட இனக்குழுவினராக இருப்பது தெரியவந்துள்ளது.[14][15]இதில் ஒரு குழுவினரின் எலும்புக் கூடுகள் கிபி 800 ஆண்டுகளுக்கு முந்தைய தெற்காசியாவைச் சேர்ந்தவர்களின் முன்னோர்கள் என்றும், பிற எலும்புக் கூடுகள் மத்தியதரைக் கடல் பகுதி மற்றும் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த இனக்குழுவினரின் கிபி 1800-ஆம் ஆண்டு காலத்திய எலும்புக் கூடுகள் எனத்தெரியவந்துள்ளது.[15]

இந்த ஏரியின் எலும்புக்கூடுகளை சேர்ந்த மனிதர்கள் ஒரே பேரழிவு நிகழ்வில் இறந்ததற்கான கோட்பாட்டை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு சோதனை மறுக்கிறது. அதே நேரத்தில் முந்தைய தெற்காசிய இனக்குழுவினரின் எச்சங்கள் பல்லாண்டுகளாக நீண்ட காலத்திற்கு காக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பிந்தைய மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்கு ஆசிய குழுவினரின் எச்சங்கள் ஒரே நிகழ்வின் போது காக்கப்பட்டுள்ளது.[15]

இந்த ஏரியின் எலும்புக் கூடுகளை அரசினர் முறையாக பாதுகாக்காத காரணத்தினால், மலையேற்றம் மேற்கொள்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் ஏரியின் எலும்புக் கூடுகளின் முதுகுத் தண்டு பகுதிகளை தங்களுடன் எடுத்துச் செல்வதால், ஏரியில் எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.[16] இதனை கண்காணிகக் சமோலி மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. [10].[17] [18]

சுற்றுலா

[தொகு]
ரூப் குண்ட் ஏரிக்கு செல்வதற்கான மலைப்பகுதி

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் இமயமலையில் அமைந்த திரிசூலி மலை (7,120 மீ) மற்றும் நந்த குந்தி மலை (6,310 மீ) இடையே அமைந்த அடிவாரத்தில் உள்ள ரூப் குண்டம் ஏரிப்பகுதி மலையேற்ற வீரர்களுக்கு முக்கியமான இடமாகும்.[19]ரூப் குண்ட் ஏரியின் பகுதி ஆண்டு முழுவதும் பனிகட்டி நிரம்பியதாக இருக்கும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதகளில் பனி உருகி விடும்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Kohli, M.S. (2000). The Himalayas : playground of the gods : trekking, climbing, adventure. New Delhi: Indus Publishing Co. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871078.
 2. 2.0 2.1 Alam, Aniket (29 June 2004). "Fathoming the ancient remains of Roopkund". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041107000331/http://www.hindu.com/2004/06/29/stories/2004062905461200.htm. பார்த்த நாள்: 29 May 2013. 
 3. Roopkund lake's skeleton mystery solved! Scientists reveal bones belong to 9th century people who died during heavy hail storm
 4. The Mystery of the Himalayas’ Skeleton Lake Just Got Weirder
 5. Andrews, Robin George (20 August 2019). "The Mystery of the Himalayas' Skeleton Lake Just Got Weirder: Every summer, hundreds of ancient bones emerge from the ice. A new genetic study helps explain how they got there.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2019/08/20/science/skeleton-lake-archaeology-roopkund.html?fallback=0&recId=1Pjl26KcWDSOLcSvsxzh2ZOwWqx&locked=0&geoContinent=NA&geoRegion=NY&recAlloc=control&geoCountry=US&blockId=home-discovery-vi-prg&imp_id=301371102. பார்த்த நாள்: 14 October 2019. 
 6. Sati, Vishwambhar Prasad; Kumar, Kamlesh (2004). Uttaranchal : dilemma of plenties and scarcities (1st ed.). New Delhi: Mittal Publ. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170998983.
 7. 7.0 7.1 7.2 "Skeleton Lake of Roopkund, India". Atlas Obscura. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
 8. "Roopkund lake's skeleton mystery solved! Scientists reveal bones belong to 9th century people who died during heavy hail storm". India Today. 31 May 2013. http://indiatoday.intoday.in/story/uttarakhand-roopkund-skeleton-lake-mystery-solved-bones-9th-century-tribesmen-died-of-hail-storms/1/277681.html. பார்த்த நாள்: 12 June 2013. 
 9. Hari Menon (8 November 2004). "Bones Of A Riddle". பார்க்கப்பட்ட நாள் 31 May 2013.
 10. 10.0 10.1 Kazmi, SMA (12 November 2007). "Tourists to Roopkund trek back with human skeletons". The Indian Express. http://www.indianexpress.com/news/tourists-to-roopkund-trek-back-with-human-skeletons/238208/. 
 11. Pant, Alka Barthwal (2018). "Roopkund Mystery “Pathology Reveals Head Injury behind the Casualties". Heritage: Journal of Multidisciplinary Studies in Archaeology 6 (2018): 1084‐1096. http://www.heritageuniversityofkerala.com/JournalPDF/Volume6/58.pdf. பார்த்த நாள்: 2020-07-27. 
 12. 12.0 12.1 Orr, David (2004-11-07). "Giant hail killed more than 200 in Himalayas". The Telegraph. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/1476074/Giant-hail-killed-more-than-200-in-Himalayas.html. 
 13. Maijanen, Heli; Wilson-Taylor, Rebecca J.; Jantz, Lee Meadows (2016). "Storm-Related Postmortem Damage to Skeletal Remains". Journal of Forensic Sciences 61 (3): 823-827. doi:10.1111/1556-4029.13048. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/1556-4029.13048. பார்த்த நாள்: 2020-07-27. 
 14. "8th International Symposium on Biomolecular Archaeology" (PDF). isba8.de. Archived from the original (PDF) on 2018-09-19.
 15. 15.0 15.1 15.2 Rai, Niraj; Reich, David; Thangaraj, Kumarasamy; Kennett, Douglas J.; Boivin, Nicole; Roberts, Patrick; Diyundi, Subhash Chandra; Kumar, Sachin et al. (20 August 2019). "Ancient DNA from the skeletons of Roopkund Lake reveals Mediterranean migrants in India" (in en). Nature Communications 10 (1): 3670. doi:10.1038/s41467-019-11357-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-1723. பப்மெட்:31431628. 
 16. "Skeletons:AWOL". Satesman 16.7.2005. uttarakhand.org (Govt. website). பார்க்கப்பட்ட நாள் 30 May 2013.
 17. "Roopkund's human skeletons go missing". Deccan Herald. 24 September 2007 இம் மூலத்தில் இருந்து 28 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150128081408/http://archive.deccanherald.com/Content/Sep242007/national2007092326962.asp. 
 18. Kazmi, SMA (5 February 2009). "Roopkund's skeletal tales". The Tribune. http://www.tribuneindia.com/2009/20090205/dplus1.htm. பார்த்த நாள்: 30 May 2013. 
 19. Nigam, Devesh (2002). Tourism, environment and development of Garhwal Himalaya (1. ed.). New Delhi: Mittal Publ. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170998709.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூப்_குண்டம்&oldid=3777851" இலிருந்து மீள்விக்கப்பட்டது