பத்ரிநாத் கோயில்
பத்ரிநாத் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 30°44′41″N 79°29′28″E / 30.744695°N 79.491175°E |
பெயர் | |
பெயர்: | பத்ரிநாத் |
தமிழ்: | பத்ரிநாத் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தராகண்டம் |
மாவட்டம்: | சமோலி |
அமைவு: | பத்ரிநாத் |
ஏற்றம்: | 3,133 m (10,279 அடி) |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | கிருஷ்ண ஜெயந்தி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பௌத்தர்களின் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | ஆதி சங்கரர் |
இணையதளம்: | http://www.badarikedar.org/ |
பத்ரிநாத் கோயில் (Badrinath Temple) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
கயிலை மலை சுனாமி
[தொகு]11. 06. 2013ல் கயிலை மலையில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக, அலக்நந்தா மற்றும் கிளை ஆறுகளில் கடும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பத்ரிநாத் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது. மேலும் உத்தராகண்டம் மாநிலத்தில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் முதலிய கோயில்களும், பொதுக்கட்டிடங்களும், வீடுகளும் பெருஞ்சேதம் அடைந்தன.[1]ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தனர். இப்பகுதியில் உள்ள தரைவழிப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன, ஆயிரக்கணக்கான இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது, இதனை சீர்செய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என உத்தரகாண்ட் மாநில அரசு அடுத்த மூன்று ஆண்டுகள் இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள இயலாது என அறிவித்தது. இந்த கோரமான நிகழ்வினை, இப்பகுதி மக்கள் இமயமலைச் சுனாமி என்று அழைக்கின்றனர்.
உத்தவரும் பதரிகாசிரமமும்
[தொகு]பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர் கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார். உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார். பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை பதரிகாசிரமம் சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் என்னை வந்தடைவாய் என்று பகவான் கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் அருகில் உள்ள பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார் உத்தவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ உத்தரகண்ட் கடும் மழை வெள்ளப் பேரிடர்கள் http://www.tehelka.com/uttarakhand-a-model-of-disaster/ பரணிடப்பட்டது 2013-12-09 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]