உள்ளடக்கத்துக்குச் செல்

திருநீரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருநீரகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருநீரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருநீரகம்)
பெயர்
புராண பெயர்(கள்):திருநீரகம்
பெயர்:திருநீரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருநீரகம்)
அமைவிடம்
ஊர்:திருநீரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருநீரகத்தான்
உற்சவர்:ஜெகதீசப்பெருமாள்
தாயார்:நிலமங்கை வல்லி
தீர்த்தம்:அக்ரூர தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
மங்களாசாசனம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கை ஆழ்வார்
விமானம்:ஜெகதீஸ்வர விமானம்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
தொலைபேசி எண்:+91- 94435 97107, 98943 88279

திருநீரகம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம் ஆகும்.

தலச் சிறப்பு

[தொகு]

இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

[தொகு]

"நீரகத்தாய்" என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முற்காலத்திலே எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.[1]

மங்களாசாசனம்

[தொகு]

திருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது.

நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரை நீர் வெஃகாவுள்ளாய்
     உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
     காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
     பெருமானுன் திருவடியே பேணினேனே
- திருநெடுந்தாண்டகம்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]