திருவாழி அழகியசிங்கர் கோயில்

ஆள்கூறுகள்: 11°12′13″N 79°46′28″E / 11.20361°N 79.77444°E / 11.20361; 79.77444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாழி அழகியசிங்கர் கோயில்
திருவாழி அழகியசிங்கர் கோயில் is located in தமிழ் நாடு
திருவாழி அழகியசிங்கர் கோயில்
திருவாழி அழகியசிங்கர் கோயில்
தமிழ்நாட்டில் திருவாழி அழகியசிங்கர் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°12′13″N 79°46′28″E / 11.20361°N 79.77444°E / 11.20361; 79.77444
பெயர்
பெயர்:திருவாழிக் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவு:திருவாழி
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

திருவாழி அழகியசிங்கர் கோயில் (Azhagiyasingar Temple, Thiruvali), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவாழி எனும் கிராமத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டு, அழகிய நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி. திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார்களால் மங்கள்சாசனம் செய்யப்பட்டது. [1] இக்கோயிலையும், திருநகரி வேதராஜன் கோயிலையும் ஒரே திவ்ய தேசமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.[2]

சோழர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது.

இத்தலத்தில் நரசிம்மர், திருமங்கை ஆழ்வாருக்கு காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. இதனருகில் காணப்படும் வேதராஜன் கோயிலுக்கும், இக்கோயிலுக்கும் மிகவும் தொடர்புள்ளது. திருநகரி வேதராஜன் கோயிலில் நடைபெறும் திருமங்கை ஆழ்வார் உற்சவம் போன்று இக்கோயிலும் ஆண்டு தோறும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

பிரகலாதன் பார்க்கையில், இரணியகசிபை வதைக்கும் நரசிம்மர், ஓவியம்
அழகியசிங்கர் சன்னதி

பூஜைகளும் திருவிழாக்களும்[தொகு]

தென் கலை வைகானச மரபு படி, அன்றாடம் கோயிலில் நான்கு வேளை பூஜை நடைபெறுகிறது. [3]

ஆண்டுதோறும் தை மாத பௌர்ணமி அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வார் மங்களசாசன உற்சவத்தின் போது இக்கோயில் உற்சவர் அழகியசிங்கர் கருட வாகனத்தில் புறப்படாகி திருமணிமாடக் கோயிலுக்கு எழுந்தருளகுகிறார்.[4]

கருட சேவையின் போது திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்திலும், திருநகரி வேதராஜன் கோயிலிலிருந்து திருமங்கை ஆழ்வார் தமது இணையர் குமுதவல்லியுடன் அன்னப் பறவை வாகனத்திலும், 11 திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்கு எழுந்தளரும் போது , திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் பாடப்படுகிறது. [4][5]பத்து நாள் நடைபெறும் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாந்த பவித்திர உற்சவம், பங்குனி உத்தரம் விழாக்கள் நடைபெறுகிறது.

குடமுழுக்கு[தொகு]

16 மார்ச் 2005இல் மகாசம்ப்ரோட்சணம் (குடமுழுக்கு) நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. S., Ramesh (1993). 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. Tirumalai-Tirupati Devasthanam. 
  2. Bansal, Sunita Pant (2008). Hindu Pilgrimage. Pustak Mahal. பக். 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122309973. https://books.google.co.in/books?id=lzPCOVQGP3wC&pg=PT157&dq=thiruvali&hl=en&sa=X&ved=0CCAQ6AEwAWoVChMIpP-xyd-KyQIVByqUCh1QmQ3X#v=onepage&q=thiruvali&f=false. 
  3. "Sri Azhagiya Singar temple". Dinamalar. 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
  4. 4.0 4.1 S., Prabhu (12 July 2012). "Shrine dedicated to Arjuna". தி இந்து. http://temple.dinamalar.com/New.php?id=654. பார்த்த நாள்: 12 November 2015. 
  5. "Garuda Sevai" (PDF). Ramanuja.org. http://www.ibiblio.org/sripedia/ramanuja/archives/feb08/pdfUQOxvBFB4v.pdf. பார்த்த நாள்: 19 September 2008. 

வெளி இணைப்புகள்[தொகு]


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thiruvali
என்பதில் ஊடகங்கள் உள்ளன.