திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
திருநாவாய் நவ முகுந்தன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°51′50″N 75°58′56″E / 10.86389°N 75.98222°Eஆள்கூறுகள்: 10°51′50″N 75°58′56″E / 10.86389°N 75.98222°E |
பெயர் | |
பெயர்: | திருநாவாய் நவமுகுந்தன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | மலப்புறம் மாவட்டம் |
அமைவு: | திருநாவாய் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள கோயிலமைப்பு |
திருநாவாய் நவ முகுந்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.[1][2] இறைவன் நவ முகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில்[1] வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.[3] இறைவி: மலர்மங்கை நாச்சியார். விமானம் வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.[4] இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.[5] திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் பாடல் பெற்ற தலமாகும்.
பித்ரு க்ஷேத்திரம்[தொகு]
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.[6]
ஓவியங்கள்[தொகு]
பழைமையான பல ஓவியங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன
அமைவிடம்[தொகு]
சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டிலிருந்தும் திருநாவாய் செல்ல பேருந்துகள் உள்ளன.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 http://traveller.outlookindia.com/destinationlink.aspx?id=887&destinationid=337
- ↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
- ↑ "Thirunavaya Temple". Indian Temples Portal. பார்த்த நாள் 2006-10-13.
- ↑ "Malappuram Tourist Attraction - Pilgrimage Centres". பார்த்த நாள் 2006-10-13.
- ↑ http://www.templenet.com/Tamilnadu/df076.html
- ↑ 6.0 6.1 குமுதம் ஜோதிடம்;30.08.2013; பக்கம் 3 பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "குமுதம்" defined multiple times with different content