உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்காரகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்காரகம்)
திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்காரகம்) is located in தமிழ் நாடு
திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்காரகம்)
திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்காரகம்)
திருக்காரகம் உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:12°50′20″N 79°42′18″E / 12.838935°N 79.705115°E / 12.838935; 79.705115
பெயர்
புராண பெயர்(கள்):திருக்காரகம்
பெயர்:திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்காரகம்)
அமைவிடம்
ஊர்:திருக்காரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கருணாகரப்பெருமாள்
தாயார்:பத்மாமணி நாச்சியார்
தீர்த்தம்:அக்ராய தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
மங்களாசாசனம்
பாடல் வகை:மங்களாசாசனம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
விமானம்:வாமன விமானம்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
தொலைபேசி எண்:+91- 94435 97107, 98943 88279

திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம் ஆகும். இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இத்தல இறைவனை ஆணவம் நீங்கும் பொருட்டு பிரார்த்தனை செய்வதுண்டு; பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம் ஆகும்.

தல வரலாறு

[தொகு]

கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்த பெருமாளை குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இத்திவ்ய தேசம் "காரகம்' எனப்பட்டது என்பர்.

மங்களாசாசனம்

[தொகு]

திருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது.

நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரை நீர் வெஃகாவுள்ளாய்
     உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
     காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
     பெருமானுன் திருவடியே பேணினேனே
- திருநெடுந்தாண்டகம்

வெளி இணைப்புக்கள்

[தொகு]

தினமலர்க் கோயில்கள்