திருக்குளந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
பெருங்குளம் பெருமாள் கோவில்
பெயர்
புராண பெயர்(கள்): திருக்குளந்தை
பெயர்: பெருங்குளம் பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்: திருக்குளந்தை
மாவட்டம்: தூத்துக்குடி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: சோர நாதன்(மாயக்கூத்தன்)
தாயார்: குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி), அலமேலு மங்கைத் தாயார்
தீர்த்தம்: பெருங்குளம்
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்: நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்: ஆனந்த நிலைய விமானம்
கல்வெட்டுகள்: உண்டு

பெருங்குளம் பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் திருக்குளந்தை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து சுமார் 6 மைல் தொலைவிலும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுமார் 7 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சோர நாதன்(மாயக்கூத்தன்), ஸ்ரீனிவாஸன் என்று பெயர்கள் உண்டு. இறைவி: குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி), அலமேலு மங்கைத் தாயார். தீர்த்தம்: பெருங்குளம். விமானம்:ஆனந்த நிலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குளந்தை&oldid=2321971" இருந்து மீள்விக்கப்பட்டது