108 வைணவத் திருத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(108 திவ்ய தேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருமால்

திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன.இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகிலும் உள்ளன. 108 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.

தொகுப்பு[தொகு]

வைணவத் திருத்தலங்கள் 108 என்று தொகுத்துக் காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் திருமலை நாயகர் [1] ஆட்சியில் அலுவலராகப் பணியாற்றியவர். இவர் தம் காலத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவத் தலங்களை 108 என்று வரையறை செய்துகொண்டு, அவை இருந்த நாடு வாரியாப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூலாக வெளிவந்துள்ளது. [2]

திவ்ய தேச வகைப்பாடு[தொகு]

திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

  • சோழநாட்டு திருப்பதிகள் - 40
  • நடுநாட்டு திருப்பதிகள் - 2
  • தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
  • வடநாட்டு திருப்பதிகள் - 11
  • மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
  • பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
  • நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2

108 வைணவத் திருத்தலங்கள்[தொகு]

108 வைணவத் திருத்தலங்களில்

அமையப் பெற்றுள்ளன.

தொடர் எண் தலக்குறிப்புகள் பெருமாள் - தாயார் பாசுரங்கள் அமைவிடம்
01. திருவரங்கம் அரங்கநாதர் அரங்கநாயகி 247 தமிழகம் - திருச்சி
02. திருக்கோழி, (உறையூர் பகுதி) அழகிய மணவாளன் - வாசலட்சுமி(நாச்சியார்) 002 தமிழகம்-திருச்சி
03. உத்தமர் கோயில் புருஷோத்தமன் - பூர்ணவல்லி 001 தமிழகம்-திருச்சி
04. திருவெள்ளறை புண்டரீகாட்சன் - பங்கயச் செல்வி 024 தமிழகம்-திருச்சி
05. அன்பில் சுந்தரராஜபெருமாள் வடிவழகியநம்பி - அழகியவல்லி 001 தமிழகம்-திருச்சி
06. கோயிலடி அப்பக்குடத்தான் - இந்திராதேவி (கமலவல்லி) 033 தமிழகம்-திருச்சி
07. திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில் ஹரசாபவிமோசனர் - கமலவல்லி 001 தமிழகம்-தஞ்சை
08. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரட்சகன் - பத்மாசானவல்லி 010 தமிழகம்-குடந்தை
09. கபிஸ்தலம் கஜேந்திரவரதர் - ரமாமணிவல்லி 001 தமிழகம்-குடந்தை
10. புள்ளபூதங்குடி வல்வில் ராமன் - பொற்றாமறையாள் 010 தமிழகம்-குடந்தை
11. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி 001 தமிழகம்-குடந்தை
12. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி 051 தமிழகம்-குடந்தை
13. ஒப்பிலியப்பன் ஒப்பிலியப்பன் - பூமிதேவி 047 தமிழகம்-குடந்தை
14. நாச்சியார்கோயில் நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார் 110 தமிழகம்-குடந்தை
15. திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் சாரநாதன் - சாரநாயகி 013 தமிழகம்-குடந்தை
16. நாதன் கோயில் ஜகந்நாதர் - செண்பகவல்லி 010 தமிழகம்-குடந்தை
17. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் - மரகதவல்லி 010 தமிழகம்-குடந்தை
18. திருக்கண்ணமங்கை பக்தவத்சலன் - அபிஷேகவல்லி 014 தமிழகம்-குடந்தை
19. திருக்கண்ணபுரம் சௌரிராஜன் - கண்ணபுரநாயகி 128 தமிழகம்-சீர்காழி
20. திருக்கண்ணங்குடி லோகநாதன் - லோகநாயகி 010 தமிழகம்-சீர்காழி
21. திருநாகை (நாகப்பட்டினம்) சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி 010 தமிழகம்-நாகப்பட்டினம்
22. திருத்தஞ்சை மாமணிக் கோயில் நீலமேகம் - செங்கமலவல்லி 005 தமிழகம்-தஞ்சை
23. தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் ஆமருவியப்பன் - செங்கமலவல்லி 045 தமிழகம்-குத்தாலம்
24. திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் அருள்மாகடல் - திருமாமகள் 010 தமிழகம்-சீர்காழி
25. தலைச்சங்காடு நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் 002 தமிழகம்-சீர்காழி
26. திருஇந்தளூர், மாயவரம் பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி 011 தமிழகம்-மாயவரம்
27. திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி தாடாளன் - லோகநாயகி 010 தமிழகம்-சீர்காழி
28. திருக்காவளம்பாடி கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; 010 தமிழகம்-சீர்காழி
29. அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி 010 தமிழகம்-சீர்காழி
30. வண்புருடோத்தமம் புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி 010 தமிழகம்-சீர்காழி
31. செம்பொன் செய்கோயில் செம்பொன்னரங்கர் - சுவேதபுஷ்பவல்லி 010 தமிழகம்-சீர்காழி
32. திருமணிமாடக் கோயில் சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி 012 தமிழகம்-சீர்காழி
33. வைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி 010 தமிழகம்-சீர்காழி
34. திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் - செங்கமலவல்லி 010 தமிழகம்-சீர்காழி
35. திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார் 010 தமிழகம்-சீர்காழி
36. திருப்பார்த்தன் பள்ளி தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன் 010 தமிழகம்-சீர்காழி
37. திருவாழி-திருநகரி கோயில்கள் வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி 042 தமிழகம்-சீர்காழி
38. திருத்தேவனார்த் தொகை தேவநாயகர் - சமுத்ரதனயா 010 தமிழகம்-சீர்காழி
39. திருவெள்ளக்குளம் சீநிவாசன் - பத்மாவதி 010 தமிழகம்-சீர்காழி
40. திருச்சித்ரகூடம், சிதம்பரம் கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி 032 தமிழகம்-சீர்காழி
41. திருவந்திபுரம் தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி 010 தமிழகம்-கடலூர்
42. திருக்கோவிலூர் திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார் 021 தமிழகம்-கடலூர்
43. திருக்கச்சி வரதராஜன் - பெருந்தேவி 007 தமிழகம்-காஞ்சி
44. அட்டபுயக்கரம் ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை 012 தமிழகம்-காஞ்சி
45. திருத்தண்கா (தூப்புல்) தீபப்பிரகாசர் - மரகதவல்லி 002 தமிழகம்-காஞ்சி
46. திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி 004 தமிழகம்-காஞ்சி
47. திருநீரகம் (காஞ்சி) ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி 001 தமிழகம்-காஞ்சி
48. திருப்பாடகம் (காஞ்சி) பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா 006 தமிழகம்-காஞ்சி
49. நிலாத்திங்கள் (காஞ்சி) நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி 001 தமிழகம்-காஞ்சி
50. திரு ஊரகம் (காஞ்சி) உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி 006 தமிழகம்-காஞ்சி
51. திருவெக்கா (காஞ்சி) யதோத்தகாரி - கோமளவல்லி 015 தமிழகம்-காஞ்சி
52. திருக்காரகம் (காஞ்சி) கருணாகரர் - பத்மாமணி 001 தமிழகம்-காஞ்சி
53. திருக்கார்வானம் (காஞ்சி) கள்வர்பெருமாள் - கமலவல்லி 001 தமிழகம்-காஞ்சி
54. திருக்கள்வனூர் (காஞ்சி) ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி 001 தமிழகம்-காஞ்சி
55. திருப்பவள வண்ணம் (காஞ்சி) பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார் 001 தமிழகம்-காஞ்சி
56. திருப்பரமேச்சுர விண்ணகரம் பரமபதநாதன் - வைகுந்தவல்லி 010 தமிழகம்-காஞ்சி
57. திருப்புட்குழி விஜயராகவன் - மரகதவல்லி 002 தமிழகம்-காஞ்சி
58. திருநின்றவூர் பத்தவத்சலர் - சுதாவல்லி 002 தமிழகம்-சென்னை
59. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் [3][4] வைத்ய வீரராகவர் - கனகவல்லி 012 தமிழகம்-சென்னை
60. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி - ருக்மணி 012 தமிழகம்-சென்னை
61. திருநீர்மலை நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை 020 தமிழகம்-சென்னை
62. திருவிடவெந்தை நித்யகல்யாணர் - கோமளவல்லி 013 தமிழகம்-சென்னை
63. திருக்கடல்மல்லை ஸ்தல சயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் 027 தமிழகம்-சென்னை
64. திருக்கடிகை (சோளிங்கர்) யோகநரசிம்மர் - அம்ருதவல்லி 004 தமிழகம்-சென்னை
65. திருவயோத்தி காேதண்டராமர் - சீதாபிராட்டி 013 உத்தரப் பிரதேசம்
66. நைமிசாரண்யம் தேவராஜன் - ஹரிலட்சுமி 010 உத்தரப் பிரதேசம்
67. திருப்பிரிதி பரமபுருஷன் - பரிமளவல்லி 010 உத்தராகண்டம்
68. தேவப்ரயாகை நீலமேகம் - புண்டரீகவல்லி 011 உத்தராகண்டம்
69. பத்ரிகாச்ரமம் பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி 022 உத்தராகண்டம்
70. முக்திநாத் ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி 012 நேபாளம்
71. வடமதுரை கோவர்த்தனகிரிதாரி - சத்யபாமா 050 உத்தரப் பிரதேசம்
72. ஆயர்பாடி கரிகிருஷ்ணப் பெருமாள் - ருக்மணி, சத்யபாமா 022 உத்தரப் பிரதேசம்
73. திருத்துவாரகை கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார் 013 குஜராத்
74. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) லட்சுமிநரசிம்மர் - செஞ்சுலட்சுமி 010 ஆந்திரம்
75. திருவேங்கடம் திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை 202 ஆந்திரம்
76. திருநாவாய் நாராயணன் - மலர்மங்கை நாச்சியார் 013 கேரளம் - திருச்சூர்
77. திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி 010 கேரளம்-திருச்சூர்
78. திருக்காட்கரை காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி 011 கேரளம்-கோட்டயம்
79. திருமூழிக்களம் திருமூழிக்களத்தான் - மதுரவேணி 014 கேரளம் -கோட்டயம்
80. திருவல்லவாழ் கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து 022 கேரளம் - கோட்டயம்
81. திருக்கடித்தானம் அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார் 011 கேரளம் - கோட்டயம்
82. திருச்செங்குன்றூர் இமையவரப்பன் - செங்கமலவல்லி 011 கேரளம் - கோட்டயம்
83. திருப்புலியூர் மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார் 012 கேரளம் - கோட்டயம்
84. திருவாறன்விளை திருக்குறளப்பன் - பத்மாசனி 011 கேரளம் - கோட்டயம்
85. திருவண்வண்டூர் பாம்பணையப்பன் - கமலவல்லி 011 கேரளம் - கோட்டயம்
86. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலட்சுமி 011 கேரளம்-திருவனந்தபுரம்
87. திருவட்டாறு ஆதிகேசவன் - மரகதவல்லி 011 தமிழகம்-கன்னியாகுமரி
88. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) கமலவல்லி - திருக்குறளப்பன் 001 தமிழகம்-கன்னியாகுமரி
89. திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி 040 தமிழகம்-நெல்லை
90. வானமாமலை தோத்தாத்ரி நாதர் - சிரீவரமங்கை 011 தமிழகம்-நெல்லை
91. ஸ்ரீவைகுண்டம்
நவதிருப்பதி
கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி 002 தமிழகம்-நெல்லை
92. திருவரகுணமங்கை (நத்தம்)
நவதிருப்பதி
விஜயாசனர் - வரகுணவல்லி 001 தமிழகம்-நெல்லை
93. திருப்புளிங்குடி
நவதிருப்பதி
காய்ச்சினவேந்தன் - மலர்மகள் 012 தமிழகம்-நெல்லை
94. திருத்துலைவில்லி மங்கலம்
இரட்டைத் திருப்பதி
நவதிருப்பதி
அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி 011 தமிழகம்-நெல்லை
95. திருக்குளந்தை
நவதிருப்பதி
மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை) 001 தமிழகம்-நெல்லை
96. திருக்கோளூர்
நவதிருப்பதி
வைத்தமாநிதி - கோளூர்வல்லி 012 தமிழகம்-நெல்லை
97. திருப்பேரை
நவதிருப்பதி
மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார் 011 தமிழகம்-நெல்லை
98. ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில், திருக்குருகூர்
நவதிருப்பதி
ஆதிநாதர் - ஆதிநாதவல்லி 011 தமிழகம்-நெல்லை
99. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி - ஆண்டாள் 002 தமிழகம்-மதுரை
100. திருத்தண்கால் தண்காலப்பன் - அன்னநாயகி 005 தமிழகம்-மதுரை
101. கூடல் அழகர் கோயில் கூடலழகர் - மதுரவல்லி 002 தமிழகம்-மதுரை
102. திருமாலிருஞ்சோலை அழகர் - சுந்தரவல்லி 128 தமிழகம்-மதுரை
103. திருமோகூர் காளமேகம் - மோகனவல்லி 012 தமிழகம்-மதுரை
104. திருக்கோஷ்டியூர் சௌம்யநாராயணர் - மகாலட்சுமி 039 தமிழகம்-திருகோஷ்டியூர்
105. திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி 021 தமிழகம்-இராமநாதபுரம்
106. திருமெய்யம் சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார் 009 தமிழகம்-புதுக்கோட்டை.
107. திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கடலமகள் நாச்சியார் 051 வானுலகம்
108. பரமபதம் பரமபதநாதர் - பெரியபிராட்டியார் 036 வானுலகம்

பெருமாள் பார்வை படும் திசைகள்[தொகு]

108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார்.

பார்வை படும் திசை திவ்ய தேசங்கள்
கிழக்கு 79
மேற்கு 19
வடக்கு 3
தெற்கு 7
மண்டலம் திவ்ய தேசங்கள்
சோழ நாடு 40
மத்திய நாடு 2
தொண்டை நாடு 22
வட நாடு 11
மலை நாடு 13
பாண்டிய நாடு 18
வானுலகம் 2

படத்தொகுப்பு[தொகு]

காண்க[தொகு]

செயலி [தொகு]

108 திவ்ய தேசம் செயலி 

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. நாயகம் - கேரளாவில் நாயர் - நாயகர் என்றே முன்னோர் பதிப்புகளில் உள்ளன
  2. அழகிய மணவாள தாசர் என்கிற பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் வெண்பாக்களால் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவராய் இருந்த வேங்கடால முதலியார் அச்சிட்ட பிரதிகளுக்கு இணங்க, பிழையறப் பரிசோதிக்கப்பட்டு, சென்னை -ஊ. புஷ்பரத செட்டியாரால் கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்தில் விபவ ஆண்டு, ஐப்பசி மாதம் பதிப்பிக்கப்பட்டது
  3. [ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=358 திருவள்ளூர் (திரு எவ்வுள்)]
  4. தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/115
"https://ta.wikipedia.org/w/index.php?title=108_வைணவத்_திருத்தலங்கள்&oldid=3837197" இலிருந்து மீள்விக்கப்பட்டது