திருச்செம்பொன் செய்கோயில்
தோற்றம்
(செம்பொன் செய்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திருச்செம்பொன் செய்கோயில் | |
|---|---|
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: | 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E |
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | பேரருளாளன் பெருமாள் கோயில் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| அமைவு: | திருநாங்கூர் |
| கோயில் தகவல்கள் | |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
திருச்செம்பொன் செய்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது. இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததாக இக்கோயிலின் தலவரலாறு கூறுகிறது.[1]
திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.[1]
| விவரம் | பெயர் |
|---|---|
| இறைவன் | செம்பொன் ரங்கர்; ஹேமரங்கர்; பேரருளாளன் |
| இறைவி | அல்லிமாமலர் நாச்சியார் |
| தீர்த்தம் | ஹேம புஷ்கரணி, கனக தீர்த்தம் |
| விமானம் | கனக விமானம் |