திருஅரிமேய விண்ணகரம்
Appearance
திருஅரிமேய விண்ணகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | குடமாடு கூத்தன் கோயில் |
பெயர்: | அரிமேய விண்ணகரம் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
அமைவு: | திருநாங்கூர் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
திருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு. தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இவரும் எழுந்தருள்வார். திருமங்கையாழ்வார் இத்தலத்தினை 10 பாக்களில் பாடியுள்ளார்.[1]
விவரம் | பெயர் |
---|---|
இறைவன் | குடமாடு கூத்தன், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் |
இறைவி | அம்ருத கடவல்லி |
தீர்த்தம் | கோடி தீர்த்தம் மற்றும் அம்ருத தீர்த்தம் |
விமானம் | உச்சருங்க விமானம் |