திருத்தேவனார்த் தொகை
தோற்றம்
| திருத்தேவனார்த் தொகை | |
|---|---|
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: | 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E |
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | மாதவப் பெருமாள் கோயில் |
| பெயர்: | திருத்தேவனார்த் தொகை |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| அமைவு: | கீழ்ச்சாலை, திருநாங்கூருக்கு அருகில் |
| கோயில் தகவல்கள் | |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.[1]
| விவரம் | பெயர் |
|---|---|
| இறைவன் | தெய்வநாயகன், மாதவநாயகன் |
| இறைவி | கடல்மகள் நாச்சியார் |
| தீர்த்தம் | சோபன புஷ்கரணி மற்றும் தேவஸபா புஷ்கரணி |
| விமானம் | சோபன விமானம் |