மயிலாடுதுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மயிலாடுதுறை
—  தேர்வு நிலை நகராட்சி  —
மயிலாடுதுறை
இருப்பிடம்: மயிலாடுதுறை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°28′N 79°04′E / 10.47°N 79.07°E / 10.47; 79.07ஆள்கூற்று: 10°28′N 79°04′E / 10.47°N 79.07°E / 10.47; 79.07
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் S. சுரேஷ் குமார் இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர் பவானிசீனிவாசன்
மக்களவைத் தொகுதி மயிலாடுதுறை
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3534106(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3534106)

மக்கள் தொகை

அடர்த்தி

85,632 (2011)

7,700/km2 (19,943/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

11.27 சதுர கிலோமீட்டர்கள் (4.35 sq mi)

54.25 மீட்டர்கள் (178.0 ft)

மயிலாடுதுறை எனும் இந்த ஊர் இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மயில்கள் நிறைந்த நகரம் இது. வடமொழியில் மயூரம் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மாயவரம் அல்லது மாயூரம் என்று வழங்கப்பட்டது.

பெயர்காரணம்[தொகு]

அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன் வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நகரின் அமைவிடம்[தொகு]

தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம்,மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி பயணத்தொலைவில் அமைந்துள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் மயிலாடுதுறையும் ஒரு நகராட்சி ஆகும். பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதியாக மயிலாடுதுறை விளங்குவதோடு தமிழகத்தின் பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது அளவில் சிறிய நகரமாய் இருந்தாலும் உலக அளவில் அறியபட்டுள்ள நகரமாக இது விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,929 1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 85,632 ஆகும். அதில் 41,869 ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.8% மற்றும் பாலின விகிதம்ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7720 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.69%, இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% தமிழ்சமணர்கள் 0.32% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[4]

தொழில் நிலவரம்[தொகு]

குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது.

நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது.

அதேபோல நகர்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.

இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதினக்கலை கல்லூரி, ஏ.வி.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சாரும். இந்த மூன்று கல்வி நிறுவனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் இன்றைய நாட்களில் மாணவர்கள் வந்து பயிலும் வண்ணம் சிறப்பு எய்தியுள்ளன. பள்ளிகளை பொறுத்த வரை தேசிய மேல்நிலை பள்ளி, நகராட்சி மேல்நிலை பள்ளி, புனித பால்கு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் பாரம்பரிய சிறப்பு கொண்டவையாகவும், ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட கல்வி போதிப்பதிலும் சிறப்புற்று விளங்குகின்றன.

நிருவாகவியல்[தொகு]

மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.

முக்கிய வீதிகள்[தொகு]

நகரத்தின் முக்கிய வீதிகளாக வண்டிகார தெரு,பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகாதானதெரு, கண்ணாரத்தெரு, துலாக்கட்டம்,தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன.

முக்கியதிருவிழா[தொகு]

நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்டுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி”முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பபட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்குகடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்[தொகு]

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது[5].

சிறப்புகள்[தொகு]

“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.

முக்கிய ஆன்மிக தலங்கள்[தொகு]

நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்காணும் ஆலயங்கள் நகரை சுற்றி அமைந்துள்ளன.

 • திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம்
 • நீடூர் - திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்
 • விளநகர் - திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்
 • பரசலூர் - கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்
 • திருச்சம்பள்ளி - திருச்செம்பொன்பள்ளி
 • பொன்செய் - புஞ்சை நற்றுணையப்பர் கோயில்
 • தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்
 • சாயாவனம் - திருச்சாய்க்காடு கோயில்
 • மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்
 • வைத்தீஸ்வரன்கோவில் - புள்ளிருக்கு வேளூர்
 • திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்
 • தலைஞாயிறு - திருக்கருப்பறியலூர்
 • திருமணஞ்சேரி- உத்வாகநாதசுவாமி கோயில்
 • தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்
 • திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்
 • பெரிய இலுப்பப்பட்டு - திருநீலகண்டேஸ்வரர்

பிரபலங்கள்[தொகு]

 • தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நகர முன்சீப்பாக இந்த ஊரில் தான் பணிபுரிந்தார்.
 • குன்றக்குடி அடிகள்
 • ’கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி
 • கோமல் அன்பரசன்
 • தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர்
 • சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்
 • திரை இயக்குநர் விஜய டி. ராஜேந்தர்
 • திரை இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
 • திரை இயக்குநர் மல்லியம் ராஜகோபால்
 • அன்பாலயா பிரபாகரன்
 • மக்கள் சக்தி இயக்கம் நிறுவனர் எம். எஸ். உதயமூர்த்தி
 • திரை ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர்
 • நடிகை பிரியா ஆனந்த்
 • திரை இசை அமைப்பாளர் சௌதர்யன்
 • முனைவர் துரை.குணசேகரன்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அருகிலுள்ள நகரங்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. மயிலாடுதுறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
 5. http://www.dinamani.com/edition_trichy/article722439.ece?service=print

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாடுதுறை&oldid=2811425" இருந்து மீள்விக்கப்பட்டது