திருத்தங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருத்தங்கல்
—  முதல் நிலை நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எ. சிவஞானம் இ. ஆ. ப. [3]
நகர்மன்றத் தலைவர் தனலக்ஷ்மி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

திருத்தங்கல் (ஆங்கிலம் : en:Thiruthangal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம்9°17′N 77°28′E / 9.28°N 77.47°E / 9.28; 77.47 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 86 மீட்டர்(482 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55,362 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 27,676 ஆண்கள், 27,686 பெண்கள் ஆவார்கள். திருத்தங்கல் மக்களின் சராசரி கல்வியறிவு80.50% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.94%, பெண்களின் கல்வியறிவு 73.10% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடுதலானதே. திருத்தங்கல் மக்கள் தொகையில் 5,918 (10.69%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 92.74% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 6.14%, இஸ்லாமியர்கள்1.03%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர்.

திருத்தங்கல் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 20.89%, பழங்குடியினர் 0.19% ஆக உள்ளனர்.

முக்கிய தொழில்கள்[தொகு]

திருத்தங்கல் சிவகாசியுடன் முன்பு இணைந்து இருந்தது. சிவகாசியைப் போலவே திருத்தங்கலிலும் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கல் குவாரிகளும் உண்டு.

போக்குவரத்து[தொகு]

சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் புகைவண்டி நிலையத்தில் நிற்கும். ஆனைக்குட்டம் , எரிச்சநத்தம், சுக்கிரவார்பட்டி, சில்லையநாயக்கன்பட்டி, செங்கமலபட்டி, வெள்ளியபுரம்,நாரணபுரம், வடமல்லாபுரம், எம் புதுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி என சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக திருத்தங்கல் விளங்குகிறது.

கோவில்கள்[தொகு]

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கே சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் ஒருங்கே அமைந்துள்ளது. மலை மேல் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள காளியம்மன் கோவிலிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். பங்குனிப் பொங்கல் மற்றும் தை பூசம் இவ்வூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் வருடாந்திர பண்டிகைகள்.

முக்கிய பிரமுகர்கள்[தொகு]

ஆரோக்யா பால் நிறுவனர் ஆர். ஜி. சந்திரமோகன் இவ்வூரைச் சேர்ந்தவர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Thiruthangal". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் டிசம்பர் 09, 2012.
  5. Thiruthangal Population Census 2011பார்த்த நாள்:26 நவம்பர் 2015

மேலும் பார்க்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தங்கல்&oldid=2669339" இருந்து மீள்விக்கப்பட்டது