அருப்புக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அருப்புக்கோட்டை
—  முதல் நிலை நகராட்சி  —
அருப்புக்கோட்டை
இருப்பிடம்: அருப்புக்கோட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°31′N 78°06′E / 9.52°N 78.1°E / 9.52; 78.1ஆள்கூற்று : 9°31′N 78°06′E / 9.52°N 78.1°E / 9.52; 78.1
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் வி. ராஜாராமன் இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி அருப்புக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

வைகைச் செல்வன் (அதிமுக)

மக்கள் தொகை 1 (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

அருப்புக்கோட்டை (Aruppukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°31′N 78°06′E / 9.52°N 78.1°E / 9.52; 78.1 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 97 மீட்டர் (318 அடி) உயரத்தில் இருக்கின்றது.இந்த ஊர் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை(45-B)யில் மதுரையில் இருந்து 48 KM தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

விஜய நகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகொட்டை என்னும் சொல்லின் மறுவுச் சொல் எனவும் கூறப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. அருப்புக்கோட்டை மக்கள் தொகையில் 7,654 (8.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 23,803 வீடுகள் உள்ளன.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அருப்புக்கோட்டை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.04%, பழங்குடியினர் 0.16% ஆக உள்ளனர்.[5]

தொழில்[தொகு]

விவசாயம் மற்றும் நெசவு அதை சார்ந்த தொழில்கள், பெரும்பான்மை நகர மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களால் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்கள்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. இந்நகரைச் சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட தனியார் நூற்பு ஆலைகள் உள்ளன.

கோவில்கள்[தொகு]

இந்துக் கோவில்கள்[தொகு]

 1. சௌடேஸ்வரி அம்மன் கோயில்
 2. அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் கோவில் தெரு
 3. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்
 4. வாழவந்தம்மன் கோவில்
 5. மலையரசன் கோவில்
 6. நாடார் சிவன் கோவில்
 7. ராமர் கோவில்
 8. விநாயகர் கோவில்
 9. சிவன் கோவில்
 10. வடிவேல் முருகன் கோவில்
 11. ஆயிரங்கண் மாரியம்மன் அருள்மிகு
 12. உச்சினி மாகாளியம்மன் கோயில்
 13. முத்தையா கோயில்
 14. காமாட்ஷி அம்மன் கொவில் குமரன் புது தெரு
 15. வண்டி மலர்ஷி அம்மன் கொவில் குமரன் புது தெரு

தேவாலயங்கள்[தொகு]

 1. சி.எஸ்.ஐ தேவாலயம்
 2. ரோமன் கத்தோலிக் தேவாலயம்
 3. ஏ.ஜி. தேவாலயம்

மசூதிகள்[தொகு]

 1. வல்லவநாதபுரம் ஜூம்மா மசூதி
 2. நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா மசூதி

கல்வி நிலையங்கள்[தொகு]

 1. சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி
 2. சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி
 3. தேவாங்கர் கலைக்கல்லூரி
 4. சாலியர் மகாஜன மேல்நிலை பள்ளி
 5. தேவாங்கர் மேனிலைப்பள்ளி
 6. S.B.K.Hr.Sec.School
 7. VISHWAS NURSERY AND PRIMARY SCHOOL
 8. SRI VISHWAS VIDHYALAYA( ICSE SCHOOL )
 9. எஸ்.பி.கே.கலைக் கல்லூரி
 10. அல் அமீன் மேல்நிலை பள்ளி
 11. SRI SOWDAMBIKA CONVENT MATRICULATION HIGHER SECONDARY SCHOOL
 12. காந்தி வித்யாலயம் மேல்நிலை பள்ளி

திரையரங்குகள்[தொகு]

 1. தமிழ்மணி
 2. மஹாராணி
 3. இளையராணி (முன்பு கோமதி என்று பெயர்)
 4. லக்ஷ்மி
 5. குவின்ஸ் நாச்சியார்

ஆதாரங்கள்[தொகு]

http:\www.aruppukottai.co.in

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. "Aruppukkottai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.
 5. Aruppukkottai Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=அருப்புக்கோட்டை&oldid=1979572" இருந்து மீள்விக்கப்பட்டது