செட்டியார்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செட்டியார்பட்டி (ஆங்கிலம்:Chettiarpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வட்டம் , இராஜபாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6950 வீடுகளும், 17,520 மக்கள்தொகையும் கொண்டது. [1] இது 9.42 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட செட்டியார்பட்டி முதல்நிலை பேரூராட்சி இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. [https://www.censusindia.co.in/towns/chettiarpatti-population-virudhunagar-tamil-nadu-803789 Chettiarpatti Population Census 2011]
  2. செட்டியார்பட்டி பேரூராட்சியின் இணையதளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டியார்பட்டி&oldid=2674208" இலிருந்து மீள்விக்கப்பட்டது