சிவகாசி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவகாசி மாநகராட்சி
வரலாறு
தோற்றுவிப்பு21 அக்டோபர் 2021
தலைமை
மேயர்
சங்கீதா இன்பம் (திமுக) 2022 முதல்
துணை மேயர்
விக்னேஷ் பிரியா (திமுக) 2022 முதல்
உறுப்பினர்கள்48
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2022

சிவகாசி மாநகராட்சி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி சிறப்புநிலை நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிப் பகுதிகளை இணைத்து 48 வார்டுகளுடன் 21 அக்டோபர் 2021 அன்று சிவகாசி மாநகராட்சி நிறுவப்பட்டது. [1][2][3]

சிவகாட்சி மாநகராட்சியின் முதல் தேர்தல்[தொகு]

2022 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சிவகாசி மாநகராட்சிக்கு முதல் முறையாக 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 32 வார்டுகளிலும், அதிமுக 11 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 1 வார்டையும், பிறர் 4 வார்டுகளிலும் வென்றனர். இம்மாநகராட்சிக்கு முதன்முறையாக நடைபெற்ற மேயர் தேர்தலில் திமுகவின் சங்கீதா இன்பமும், துணை மேயர் தேர்தலில் விக்னேஷ் பிரியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாசி_மாநகராட்சி&oldid=3407233" இருந்து மீள்விக்கப்பட்டது