விருதுநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய விருதுநகர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
விருதுநகர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
விருதுநகரில் ஒரு தெருக்காட்சி
விருதுநகர்
இருப்பிடம்: விருதுநகர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°34′59″N 77°57′29″E / 9.583°N 77.958°E / 9.583; 77.958ஆள்கூற்று: 9°34′59″N 77°57′29″E / 9.583°N 77.958°E / 9.583; 77.958
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எ. சிவஞானம் இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர் சாந்தி
மக்களவைத் தொகுதி விருதுநகர்
மக்களவை உறுப்பினர்

டி. இராதாகிருஷ்ணன்(அஇஅதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

73,003 (2001)

19,061/km2 (49,368/சது மை)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

3.83 square kilometres (1.48 சது மை)

56 metres (184 ft)


விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரைப் பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,889 ஆண்கள், 36,407 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.76%, பெண்களின் கல்வியறிவு 89.38% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. விருதுநகர் மக்கள் தொகையில் 6,454 (8.93%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். விருதுநகரில் 19,841 வீடுகள் உள்ளன.[4]

பள்ளிகள்[தொகு]

 1. சௌடாம்பிககை மேல்நிலைப் பள்ளி
 2. சத்திரியா பெண்கள் நடுநிலைப் பள்ளி
 3. சத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி
 4. கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளி
 5. கே.வி.எஸ்.உயர்நிலைப் பள்ளி
 6. கே.வி.எஸ். நூற்றாண்டு விழா ஆரம்பப் பள்ளி
 7. ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி
 8. செவன்த்டே ஆங்கில உயர்நிலைப் பள்ளி
 9. எஸ்.வி.ஏ.அண்ணாமலயம்மாள் நடுநிலைப் பள்ளி
 10. கே.வி.எஸ். ஆங்கில மொழிமூலப் பள்ளி
 11. கோ. சா. கு அரசு மேல்நிலைப்பள்ளி

கல்லூரிகள்[தொகு]

 1. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சூலக்கரை விருதுநகர்
 2. விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி
 3. வி. வி. வி . பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரி
 4. ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
 5. வி. எச். என். எஸ். என் அறிவியல் கலைக் கல்லூரி

கோயில்கள்[தொகு]

 • பராசக்தி மாரியம்மன் கோவில்
 • முருகன் கோவில்

பராசக்தி மாரியம்மன் கோவில்[தொகு]

மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர்.இந்த விழாவானது 21 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதத் தொடக்கத்தில் பொங்கல் சாட்டப் படும் பிறகு ஊரில் உள்ள அனைவரும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் அதிகாலை பெண்கள் கோவில் கொடி மரத்திற்குக் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவர்.

சிறப்பு[தொகு]

 • பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர்.
 • "வியாபார நகரம்" என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன.பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது.
 • புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. Virudhunagar Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருதுநகர்&oldid=2557109" இருந்து மீள்விக்கப்பட்டது