சாத்தூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாத்தூர் வட்டம் (Sattur Taluk), தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சாத்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 53 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 1,68,607 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 83,151 ஆண்களும், 85,456 பெண்களும் உள்ளனர். 47,891 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 60.7% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.21% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17,098 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 40,787 மற்றும் 329 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.81% , இசுலாமியர்கள் 1.4%, கிறித்தவர்கள் 3.66% மற்றும் பிறர் 0.03% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தூர்_வட்டம்&oldid=2787934" இருந்து மீள்விக்கப்பட்டது