ஜெயங்கொண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெயங்கொண்டம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
வட்டம் உடையார்பாளையம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி, இ. ஆ. ப [3]
நகராட்சிதலைவர்
சட்டமன்றத் தொகுதி ஜெயங்கொண்டம்
சட்டமன்ற உறுப்பினர்

கே. எஸ். கண்ணன் (திமுக)

மக்கள் தொகை 31,268 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஜெயங்கொண்டம் (ஆங்கிலம்:Jayankondam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இருக்கும் 21 மன்ற உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சி ஆகும்.[4][5]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வட்டம் 33,945 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 16,716 ஆண்களும், 17,229 பெண்களும் உள்ளனர். 21 வார்டுகளும், 8,664 குடும்பங்கள் கொண்ட இந்நகரத்தின் எழுத்தறிவு 80.34% ஆகும். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1031 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3520 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 886 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.63%, இசுலாமியர்கள் 4.53%, கிறித்தவர்கள் 2.42% மற்றும் பிறர் 0.42%ஆகவுள்ளனர்.[6]

போக்குவரத்து[தொகு]

இதன் அருகிலுள்ள விமானநிலையம், திருச்சி விமானநிலையம் ஆகும்.

அரியலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகியவை ஜெயங்கொண்டத்திக்கு அருகில் உள்ள இரு முக்கிய தொடருந்து நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.

பள்ளிகள்[தொகு]

அரசு மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, மாடர்ன் மெட்ரிக்குலேசன் பள்ளி, பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளி.

மருத்துவமனைகள்[தொகு]

அரசு மருத்துவமனை

ஆதாரங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயங்கொண்டம்&oldid=3320123" இருந்து மீள்விக்கப்பட்டது