பரோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Parotta
Malabar Parota and egg curry.JPG
பரோட்டாவும் முட்டைக்கறியும்
வகைஉரொட்டி
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிதென்னிந்தியா and இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்மைதா, eggs, நெய் or oil
Cookbook: Parotta  Media: Parotta

பரோட்டா அல்லது புரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும்.[1] இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

வகைகள்[தொகு]

 • சாதாரண பரோட்டா
 • கொத்து பரோட்டா
 • முட்டை பரோட்டா
 • சில்லி பரோட்டா
 • விருதுநகர் எண்ணெய் பரோட்டா
 • வீச்சு
 • கோதுமை பரோட்டா
 • தூத்துக்குடி பொறித்த புரோட்டா
 • பன் பரோட்டா

தேவையான பொருட்கள்[தொகு]

 • மைதா மாவு (தேவையான அளவு).
 • உப்பு (தேவையான அளவு)
 • எண்ணெய் (தேவையான அளவு)
 • தண்ணீர் (தேவையான அளவு)

செயல்முறை[தொகு]

 • மைதா மாவை பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டும் பின் எண்ணெய் விட்டும் பிசைந்து, மிருதுவான பின்னர் சிறு உருண்டைகளாக பிசைந்த மாவை உருட்ட வேண்டும். உருண்டையை உருட்டும் கட்டையின் உதவியோடு, பெரிய வட்டமாக உருட்டி, அதனை மடித்து, அதனை அழுத்தி சிறிது வட்டமாக மாற்றவும். பின்னர் தோசைக்கல்லில் இட்டு சந்தன நிறத்தில் மாறியவுடன் எடுத்தால் பரோட்டா தயாராகி விடும்.
 1. மைதாவில் முதலில் தேவையான அளவு உப்பு போட்டு, 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி்ப் பிசைந்து தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.
 2. இதை 4 மணி நேரம் ஊறவிடவும்.
 3. பின் உருண்டைகளாக செய்து எல்லா உருண்டைகள் மீதும் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் தடவி, ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து அதன் மீது போட்டு மூடிவைக்கவும்.
 4. பின் கால் மணி நேரம் கழித்து அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து வளர்த்து இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக செய்துக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்துவைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டுவைக்கவும்.
 5. பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தவாவை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் கைவிரல்களால் தட்டி எண்ணெயில் போட்டு இருபக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.

உடன் பரிமாறுவை[தொகு]

 1. சைவ சால்னா
 2. அசைவ சால்னா
 3. கொத்து கறி


சிக்கல்கள்[தொகு]

மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். அது மட்டுமல்ல, நீரிழிவு (சர்க்கரை) நோய் வர வாய்ப்புகள் அதிகம்.[சான்று தேவை] இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன.[2] பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert". விகடன் இணையத்தளம். 13 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
 2. "கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert". விகடன் இணையத்தளம். 13 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோட்டா&oldid=3101160" இருந்து மீள்விக்கப்பட்டது