புளியோதரை
புளியோதரை (puliyodharai) தென்னிந்தியாவில் உண்ணப்படும் பரவலான உணவு. இது பெரும்பாலும் வைணவக் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டாலும், வீட்டில் சமைத்தும் உண்பர். புளி+ ஓரை (சமைத்த அரிசி) = புளியோரை. புளியோரை என்பதே பின்னர் மருவி புளியோதரை என்றாகியது. கன்னடத்தில் ஹுளியன்னா (புளி + அன்னம்) எனவும் தெலுங்கில் புலிஹோரா (புளி + ஓரை) என்றும் அழைக்கின்றனர். தமிழ் பிராமண அய்யங்கார்களே இதை அதிகம் விரும்பி உண்பர். புளிக் கரைசல், வேர்க்கடலை, மிளகாய், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியனவற்றை வெந்த அரிசியுடன் கலந்து புளியோரை செய்யப்படும்.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "புளியோதரை". ஆகத்து 22, 2015 அன்று பார்க்கப்பட்டது.