உள்ளடக்கத்துக்குச் செல்

போண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருளைக்கிழங்கு மசால் போண்டா

போண்டா தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உண்ணப்படும் ஒரு பலகாரம் ஆகும். இது கோளவடிவில் இருக்கும். கடலை மாவினை எண்ணெயில் பொரித்து இது செய்யப்படுகிறது. இதன் மேற்பகுதி மொறுமொறுப்பாகவும் உட்பகுதி மெதுமெதுவெனவும் இருக்கும்.[1]

  • உருளைக்கிழங்கு மசியல்[2], வேக வைத்த முட்டை[3], மசித்த கீரை[4] போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளங்கைக்குள் அடங்குமாறு பிடித்து அதனை கடலை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொறித்து போண்டா செய்யப்படுகிறது.
  • மேலும் இத்துடன் கடலை மாவுடன் கார மசாலா பொருட்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் போண்டா சாதா போண்டா அல்லது கார போண்டா என்றும் அழைக்கப்படுகிறது.
  • மேலும் மேற்கண்ட கலவையுடன் கீரை சேர்த்து கொண்டு செய்யப்படும் போண்டா கீரை போண்டா என்றும் அழைக்கப்படுகிறது.
  • வெறும் கடலை மாவுடன் வரமிளகாய் அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் போண்டா கடலை மாவு போண்டா அல்லது மெது போண்டா என்றும் அழைக்கப்படுகிறது.

போண்டா வகைகள்

[தொகு]
  • போண்டா (கார போண்டா)
  • உருளைக்கிழங்கு போண்டா (மசால் போண்டா)
  • கடலை மாவு போண்டா (மெது போண்டா)
  • பர்மா போண்டா
  • கீரை போண்டா
  • முட்டை போண்டா

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "போண்டா". Archived from the original on 2015-08-16. Retrieved ஆகத்து 22, 2015.
  2. "உருளை போண்டா". Retrieved ஆகத்து 22, 2015.
  3. "முட்டை போண்டா". Retrieved ஆகத்து 22, 2015.
  4. "கீரை போண்டா". Archived from the original on 2016-03-05. Retrieved ஆகத்து 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போண்டா&oldid=4052218" இலிருந்து மீள்விக்கப்பட்டது