உள்ளடக்கத்துக்குச் செல்

சட்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்னி
தென்னிந்தியாவில் பரிமாரப்படும் ஒரு வகைச் சட்னி
மாற்றுப் பெயர்கள்சட்னி
தொடங்கிய இடம்இந்தியா, பாகிஸ்தான்
பகுதிதெற்காசியா
முக்கிய சேர்பொருட்கள்உப்பு, மிளகாய், புளி, கொத்தமல்லி இலை, தக்காளி

சட்னி என்பது உணவுகளுடன் தொட்டு சாப்பிடுவதற்காக தயாரிக்கப்படும் இணை பதார்த்தமாகும். இவை சில காய்கறிகள் அல்லது வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு போன்றவற்றுடன் நறுமணப் பொருட்களுடன் அரைத்து, பின்னர் எண்ணெயில் தாளித்து, பலவிதவிதமான சட்னி வகைகள் தயாரிக்கப்படுகிறது. இதனை இட்லி, தோசை & வகைகள், பொங்கல், உப்மா, இடியாப்பம், ஆப்பம், பணியாரம், வடை, போண்டா, பஜ்ஜி, சம்சா போன்ற பல விதமான நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் மற்றும் பலகாரங்கள் உடன் கலந்து உட்கொள்ளப்படுவதாகும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

சட்னி என்ற வார்த்தை இந்தி சொல்லான चटनी (சட்னி) என்பதிலிருந்து உருவானது. चाटना என்பதன் பொருள் 'நக்குவது' அல்லது 'பசியுடன் சாப்பிடுவது' என்பதிலிருந்து பெறப்பட்டது. இந்தியாவில், சட்னி என்பது பொதுவாக புதிதாக தயாரிக்கப்பட்டவைகளையும் மற்றும் ஊறுகாய் தயாரிப்புகளையும் குறிக்கிறது.[1][2] இருப்பினும், பல இந்திய மொழிகள் இந்த வார்த்தையை புதிய தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில், தொகையல் அல்லது துவையல் (தமிழ்) என்பது சட்னியைப் போன்ற ஆனால் பசை போன்ற நிலைத்தன்மையுடன் கூடிய தயாரிப்புகளை குறிக்கின்றது. ஆந்திரப் பிரதேசத்தில் இது பச்சடி என்றும் அழைக்கப்படுகிறது. கேரளாவில் "சம்மந்தி" என்றும் தெலங்காணாவில் "தொக்கு" அல்லது "பச்சடி" என்றும் அழைக்கப்படுகிறது. "தேங்காய் சட்னி," தேங்காய் சார்ந்த சட்னி, 'சட்னி' பொதுவாக கூற்படுவதோடு பொதுவாகத் தயாரிக்கப்படுவதாகவும் உள்ளது.

தென்னிந்திய சட்னிகளான தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி

வகைகள்

[தொகு]

பலவிதமான் சட்னிகள் உண்டு. நன்மை பயக்கும் என நம்பப்படும் மருத்துவ தாவரங்களும் சில சமயங்களில் சட்னிகளாக தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக பிறண்டை துவயல்[3] அல்லது பீர்கங்காய் துவயல் அல்லது பீரகயா தொக்கு. பாகற்காய் கூட சட்னி தயாரிக்கப் பயன்படுத்தலாம்.[4] இது ஒரு சுவையாக இருக்கும்.[5][6] எப்போதாவது, சுவையிலும் நிறத்திலும் மாறுபட்ட சட்னிகளை ஒன்றாக பரிமாறலாம்—பச்சை புதினா மற்றும் மிளகாய் சட்னியுடன் மாறுபட்ட இனிப்பு பழுப்பு புளி மற்றும் பேரீச்சம்பழ சட்னி ஆகியவை விருப்பமான கலவையாக இருக்கலாம்.[7][8][9][10]

மேலும் சில :

  • தேங்காய் சட்னி
  • தக்காளிச் சட்னி
  • கொத்தமல்லி சட்னி
  • வெங்காய சட்னி (மிளகாய் சட்னி/கார சட்னி)
  • பொட்டுக்கடலை சட்னி
  • வேர்க்கடலை சட்னி (மலாட்டை சட்னி)
  • பூண்டு சட்னி
  • புதினா சட்னி
  • வாழைப்பூச் சட்னி
  • வாழைத்தண்டுச் சட்னி
  • மாங்காய் சட்னி
  • பூசனிக்காய் சட்னி
  • வெள்ளரிக்காய் சட்னி
  • பாண்டிச்சேரி சட்னி

செயல்முறை

[தொகு]

ஒவ்வொரு சட்னியின் செயல்முறை அதன் மூலப்பொருளை கொண்டுள்ளது. (எ.கா.) தேங்காய் சட்னி என்பது தேங்காய் வைத்து செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

தேங்காய், தண்ணீர், தேவையான அளவுக்கு உப்பு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை.

தேங்காயை உடைத்து துருவி, பின்பு மிளகாய் சேர்த்து ஆட்டுக்கல்லில்(மிக்சியில்) போட்டு நன்றாக அரைக்க வேண்டும். தேவையான் தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு தேங்காய் சட்னி உருவாகிவிடும். இதன் பின்னர், கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்து சட்னியுடன் கலக்க வேண்டும். இதனை மொரு மொருவான தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

சான்றுகள்

[தொகு]
  1. "chutney". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. "Chutney". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  3. "Pirandai Thuvayal". Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2017.
  4. Padhu (20 June 2012). "Peerkangai Thogayal-Ridge Gourd Chutney (thuvayal) Recipe". பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
  5. M., Chebbi, Deepak. "Recipes - Bitter Gourd Chutney Powder". yousigma.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. "Hagalakayi Chutney / Bitter gourd chutney". Smithakalluraya.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
  7. "Date And Tamarind Chutney/ Coriander And Mint Chutney » DivineTaste". www.divinetaste.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
  8. "Khajur Imli ki Chutney recipe - Imli ki Chutney Recipes - by Tarla Dalal - Tarladalal.com - #2796". www.tarladalal.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
  9. "green chutney recipe, how to make punjabi green chutney recipe". www.vegrecipesofindia.com. 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
  10. "How to make Green Chutney & Sweet Chutney for Chats : (Mint Chutney) / (Date & Tamarind Chutney) / Chutneys for Chats". www.tastyappetite.net. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்னி&oldid=3916737" இலிருந்து மீள்விக்கப்பட்டது