சிக்கன் 65

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கன் 65
பரிமாறப்படும் வெப்பநிலைதுரித உணவு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிசென்னை,[1] தமிழ்நாடு
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்கோழி, இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு
வேறுபாடுகள்இடத்திற்கு இடம் சுவை மாறுபடும்

சிக்கன் 65 (Chicken 65) என்பது காரமான, நன்கு பொறித்த கோழி உணவாகும். இது இந்தியாவின் சென்னையில்[1] உள்ள புகாரி உணவகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இது விரைவு சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது. இதன் சுவையானது சிவப்பு மிளகாய் காரணமாக இருக்கலாம். ஆனால் இதனைத் தயாரிக்கப்பயன்படும் பொருட்களின் கலவை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. எலும்புடனோ அல்லது எலும்பு இல்லாமலோ உள்ள கோழிக்கறியினைப் பயன்படுத்தி இந்த உணவு தயாரிக்கப்படலாம். பொதுவாக வெங்காயம் மற்றும் எலுமிச்சை அழகுபடுத்தலுக்காக இதனுடன் பரிமாறப்படுகிறது. "பன்னீர் 65" அல்லது "கோபி 65" போன்ற சைவ உணவு வகைகளில் கோழி இறைச்சிக்குப் பதிலாகப் பன்னீர் அல்லது பூக்கோசு பயன்படுத்தப்படுகிறது. "சிக்கன் 65" என்ற பெயர் உலகளவில் இந்த உணவினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், இதன் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

தோற்றம்[தொகு]

சிக்கன் 65 புஹாரி உணவக குழுமமான ஏ.எம். புஹாரியின் கண்டுபிடிப்பு என்று நன்கு அறியப்பட்டபோதிலும்,[1] இந்த பெயரின் புகழ் மற்றும் தோற்றம் குறித்து பல கட்டுக்கதைகள் உருவாகியுள்ளது. 1965ஆம் ஆண்டில் இந்திய வீரர்களுக்கு ஒரு எளிய உணவு தீர்வாக இந்த உணவு வெளிப்பட்டதாக ஒரு கருத்து கூறுகிறது. மற்றொரு கருத்தின்படி இது 65 மிளகாய் மிளகுத்தூள் கொண்ட ஒரு உணவு என்பதாகும். மேலும் 65நாள் வயதான கோழி இறைச்சி பயன்படுத்தி இந்த உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இது தொடர்புப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் கோழியின் 65 துண்டுகளால் தயாரிக்கப்படுகிறது என்கின்றனர். [3] [4]

மேலும் காண்க[தொகு]

  • கோழி உணவுகளின் பட்டியல்
  • ஆழமான வறுத்த உணவுகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Susanna Myrtle Lazarus. "The hows & whys of our chicken 65". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
  2. "What is 65 in Chicken 65?". recipes.timesofindia.com. 8 September 2017.
  3. Modern Spice: Inspired Indian Flavors for the Contemporary Kitchen. https://books.google.com/books?id=O0i-kMomYIAC. 
  4. Eating India. https://books.google.com/books?id=LTx4ZiPJbmcC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கன்_65&oldid=3773433" இலிருந்து மீள்விக்கப்பட்டது