பூக்கோசு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பூக்கோசு | |
---|---|
Cauliflower, cultivar unknown | |
இனம் | |
Brassica oleracea | |
பயிரிடும்வகைப் பிரிவு | |
Botrytis cultivar group | |
தோற்றம் | |
Northeast Mediterranean | |
Many; see text. |

ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 104 kJ (25 kcal) |
5 g | |
சீனி | 1.9 g |
நார்ப்பொருள் | 2 g |
0.3 g | |
புரதம் | 1.9 g |
உயிர்ச்சத்துகள் | |
தயமின் (B1) | (4%) 0.05 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (5%) 0.06 mg |
நியாசின் (B3) | (3%) 0.507 mg |
(13%) 0.667 mg | |
உயிர்ச்சத்து பி6 | (14%) 0.184 mg |
இலைக்காடி (B9) | (14%) 57 μg |
உயிர்ச்சத்து சி | (58%) 48.2 mg |
உயிர்ச்சத்து ஈ | (1%) 0.08 mg |
உயிர்ச்சத்து கே | (15%) 15.5 μg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (2%) 22 mg |
இரும்பு | (3%) 0.42 mg |
மக்னீசியம் | (4%) 15 mg |
மாங்கனீசு | (7%) 0.155 mg |
பாசுபரசு | (6%) 44 mg |
பொட்டாசியம் | (6%) 299 mg |
சோடியம் | (2%) 30 mg |
துத்தநாகம் | (3%) 0.27 mg |
Other constituents | |
நீர் | 92 g |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
பூக்கோசு (அல்லது பூங்கோசு, காலிபிளவர்) ஒரு ஓராண்டுத் தாவர (annual plant) வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களையப்பட்ட பின்னர், அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும். இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.
தாவரவியல் பெயர்[தொகு]
இதன் தாவரவியல் பெயர் Brassica oleracea. பூக்கோசு, முட்டைக்கோசு, களைக்கோசு (brussel sprouts), பரட்டைக்கீரை (kale), பச்சைப்பூக்கோசு (broccoli), சீமை பரட்டைக்கீரை (collard greens) அனைத்தும் ஒரே குடும்பத் தாவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்பவெப்பநிலை[தொகு]
பூக்கோசு குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.
சத்துக்கள்[தொகு]
பூக்கோசில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது அதிக சத்தடர்வு (nutritional density) கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
புற்றுநோய்களை எதிர்க்கும், தடுக்கும் குணம்[தொகு]
கல்லீரல் நச்சகற்றியாக உள்ள பூக்கோசில் sulforaphane எனப்படும் புற்றுநோய் எதிரி, indole-3-carbinol எனப்படும் கழலை எதிரி (anti-tumour) மற்றும் பெண்மையியக்குநீர் எதிரி (anti-estrogen) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் (phytochemicals) காணப்படுகின்றன.(சான்று தேவை)
ஆகையால் அது மார்பக மற்றும் ஆண்குறி புற்றுநோய்களை எதிர்க்கும் மற்றும் தடுக்கும் குணம் உடையது.(சான்று தேவை)