மிளகாய்
மிளகாய் | |
---|---|
![]() | |
Red bell pepper fruit and longitudinal section | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | [Eudicots] |
தரப்படுத்தப்படாத: | [Asterids] |
வரிசை: | [Solanales] |
குடும்பம்: | உருளைக் கிழங்கு |
துணைக்குடும்பம்: | [Solanoideae] |
சிற்றினம்: | [Capsiceae] |
பேரினம்: | Capsicum L.[1] |
இனம் (உயிரியல்) | |
மிளகாய் (Capsicum) என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.[3] பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
கார அளவுகள்[தொகு]
உலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த சுகோவில் அளவு (Scoville Units) எனப்படும் முறையே பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
இனிப்பு மிளகாய்[தொகு]
இனிப்பு வகை மிளகாய்களின் காரத் தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இனிப்பு வகையை சார்ந்தவை.
மிதமான கார மிளகாய்[தொகு]
மிதமான கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை மிதமான கார வகையை சார்ந்தவை.
இடைப்பட்ட கார மிளகாய்[தொகு]
இடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இடைப்பட்ட கார வகையைச் சார்ந்தவை.
கார மிளகாய்[தொகு]
கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார வகையைச் சார்ந்தவை.
அதீத கார மிளகாய்[தொகு]
அதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.
ஊட்டச்சத்து விவரம்[தொகு]
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 166 kJ (40 kcal) |
8.8 g | |
சீனி | 5.3 g |
நார்ப்பொருள் | 1.5 g |
0.4 g | |
புரதம் | 1.9 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ | (6%) 48 μg(5%) 534 μg |
உயிர்ச்சத்து பி6 | (39%) 0.51 mg |
உயிர்ச்சத்து சி | (173%) 144 mg |
நுண்ணளவு மாழைகள் | |
இரும்பு | (8%) 1 mg |
மக்னீசியம் | (6%) 23 mg |
பொட்டாசியம் | (7%) 322 mg |
Other constituents | |
நீர் | 88 g |
Capsaicin | 0.01g – 6 g |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் வைட்டமின் சியும் சிறிய அளவிளான கரோடீன் (carotene – provitamin A) பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.
படத்தொகுப்பு[தொகு]
பல வேறுபட்ட மிளகாய் வகைகள் உள்ளன. மிளகாய்த் தாவரத்தின் காய்களே பயன்படுபவை. அந்தக் காய்கள் நீளமானவை, குறிகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமனவை என பல்வேறு வடிவங்களில் இருப்பதுடன், காரத் தன்மையிலும் வேறுபடுகின்றன.
வகைகள்[தொகு]
- குடை மிளகாய்
- பிமென்டோ மிளகாய்
- ரெல்லானோ மிளகாய்
- இனிப்பு பனானா மிளகாய்
- பொப்பிலானோ/ஆன்சோ மிளகாய்
- பெர்முடா கார மிளகாய்
- ஆர்டேகா மிளகாய்
- பப்பிரிகா மிளகாய்
- கார பனானா மிளகாய்
- ரோகோடில்லோ மிளகாய்
- அலபீனோ மிளகாய்
- கயன் மிளகாய்
- டபாஸ்கோ மிளகாய்
- செர்ரானோ மிளகாய்
- சில்டிபின் மிளகாய்
- ஆபெர்னரோ மிளகாய்
- ரொகோடோ மிளகாய்
- தாய்லாந்து மிளகாய்
இந்திய வகைகள்[தொகு]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ "Capsicum L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1 September 2009. 2010-01-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Species records of Capsicum". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-01-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிபிசி இணையத்தில் பச்சை மிளகாய் வரலாறு
வெளி இணைப்புகள்[தொகு]
- மிளகாய்
- Plant Cultures: Chilli pepper botany, history and uses பரணிடப்பட்டது 2005-02-20 at the வந்தவழி இயந்திரம்
- The Chile Pepper Institute of New Mexico State University பரணிடப்பட்டது 2016-11-20 at the வந்தவழி இயந்திரம்
- Capsicums: Innovative Uses of an Ancient Crop
- Some like it hot[தொடர்பிழந்த இணைப்பு]
- Chilli: La especia del Nuevo Mundo பரணிடப்பட்டது 2012-11-14 at the வந்தவழி இயந்திரம்