பொரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொரியல்
Momordica cymbalaria cooked (Athalakkai poriyal).jpg
வகைவேகவைத்தது
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
முக்கிய சேர்பொருட்கள்காய்கறி, மசாலாப் பொருள்
Cookbook: பொரியல்  Media: பொரியல்

பொரியல் (Poriyal)( தமிழ்: பொரியல் ) என்பது வறுத்த, அல்லது சில நேரங்களில் வேகவைத்த காய்கறி உணவின் தமிழ் சொல் ஆகும். இந்த உணவு கன்னட மொழியில் "பல்யா" எனவும், தெலுங்கு மொழியில் "வேபுடு" எனவும் அழைக்கப்படுகிறது.

செய்முறை[தொகு]

இது வழக்கமாக மசாலாப் பொருட்களுடன் துண்டாக்கப்பட்ட அல்லது சிறிய துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகளால் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பில் பொதுவாக கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம் மற்றும் பொரியல் செய்ய வேண்டிய முக்கிய காய்கறி இடம் பெறுகிறது. மேலும், மஞ்சள் தூள், பல்வேறு மசாலாப் பொருட்கள், உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கப்படுகிறது. இறுதியாக கொத்தமல்லி, கருவேப்பிலை போன்ற இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில், துருவிய தேங்காய் சுவையைக் கூட்டவும், அலங்காரத்திற்காகவும் இதில் சேர்க்கப்படுகிறது.

பொரியல் தயாரிப்பில் பல பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் மிகவும் பொதுவான உணவான "பால்யா",, பொரியலுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. "பால்யா" செய்முறையில் உளுத்தம் பருப்பிற்கு பதிலாக கொண்டைக் கடலை பருப்பு உபயோகிக்கப்படுகிறது. ஆந்திர பிராந்தியத்தில் பிரபலமாக உள்ள போருட்டு என்னும் உணவு வகை கிட்டத்தட்ட இதே முறையில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த பெயர் குடு போருட்டு என்பது முட்டை பொரியல் என மாற்றம் அடைந்துள்ளது.

பரிமாறும் முறை[தொகு]

பொரியல் ஒரு பக்க உணவாக, அரிசி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடிய சாம்பார், ரசம் மற்றும் தயிருடன் பரிமாறப்படுகிறது. எல்லா பொரியல்களும் முன்னிருப்பாக சில காய்கறிகள் மற்றும் பயறு வகைகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. ஆனால் சில முக்கிய காய்கறியின் பொரியல் செய்முறைகளில் வேறுபாடுகள் உள்ளன.

பொரியலின் வகைகள்[தொகு]

உருளைக்கிழங்கு: பொரியல்: உருளைக்கிழங்கால் ஆனது. தமிழகத்தில் இது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது
பீன்ஸ பொரியல்: பச்சை அல்லது சரம் பீன்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கேரட் பொரியல்: பச்சையாகவும், வேகவைத்தும் தயாரிக்கப்படுகிறது. இதில் ஊரவைத்த பாசிப்பருப்பு, தேவையான அளவு பச்சை மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கப்படுகிறது. புரதச் சத்து நிறைந்தது என்பதால் இது காலை நேர உணவாக தயாரிக்கப்படுகிறது..

சொற்பிறப்பு[தொகு]

பொரியல் என்ற சொல் உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள சமையல் அல்லது தயாரிப்பு செயல்முறையை குறிக்கிறது. பொரி என்ற வினைச்சொல் வறுக்கவும், அதாவது ஒரு சிறிய அளவு சூடான எண்ணெயுடன் சூடான பதத்தில் சமைப்பதைக் குறிக்கிறது. ஒரு பெயர்ச்சொல்லாக பொரி என்ற சொல் பஃப் செய்யப்பட்ட அரிசி அல்லது பாப்கார்னைக் குறிக்கிறது. இது இதேபோன்ற முறையில் தயாரிக்கப்படுகிறது.

ஒரு உணவு அதன் சமையல் செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட பிற தமிழ் சொற்கள்:

அவியல் - ஆவியில் வேகவைக்கும் முறை
கடையல் - வேகவைத்த பயறு வகைகளை அரைத்து / பிசைந்து செய்யும் முறை
மசியல் - வேகவைத்த காய்கள் மற்றும் இலை கீரைகளின் கூழ் கலவை
துவையல் - அரைக்கப்பட்ட காய்கறிகளின் கரடுமுரடான கலவை
வறுவல் - சிவந்த நிறம் வரும்வரை எண்ணெய் பயன்படுத்தி வறுக்கும் காய்கறி கலவை
வதக்கல் - சிறிது எண்ணெய் பயன்படுத்தி காய்கறி கலவையை வேக வைக்கும் முறை
வற்றல் - வெயிலில் காய வைக்கும் முறை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரியல்&oldid=2818221" இருந்து மீள்விக்கப்பட்டது