இரசம் (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருமேனியா உருளைக்கிழங்கு ரசம்

இரசம் என்பது உணவாக தயாரித்து உண்ணப்படும் திரவமாகும். உணவுண்பதற்குச் சற்று முன்னோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறவும் பொதுவாக உள்ளெடுக்கப்படும்.

புளியை நீரில் கரைத்து, உப்பு மற்றும் ரசப்பொடி சேர்த்து, கொதிக்க வைத்த உணவுப்பொருள் புளி ரசம் எனப்படும். இது தமிழகத்தில் பிரபலம். பொதுவாக தமிழரின் மதிய உணவில் சாதத்துடன் முதலில் குழம்பு, பிறகு ரசம், கடைசியில் தயிர் என்ற வரிசையில் பரிமாறப்படும்.

ரச வகைகள்[தொகு]

மிளகு ரசச் சோறு, தமிழகம்
 • மிளகு ரசம்
 • சீரக ரசம்
 • பருப்பு ரசம்
 • பருப்புருண்டை ரசம்,
 • மைசூர் ரசம்(தேங்காய் அல்லது கொப்பரை அறைத்து)
 • திப்பிலி ரசம்
 • எலுமிச்சை ரசம்
 • அண்ணச்சிப் பழ புளி ரசம்
 • தக்காளி ரசம் (குரைவான் புளியுடன்),
 • வேப்பம்பூ ரசம்,
 • அள்ளி பருப்பு ரசம் (முக்கால் வெந்த பருப்பு இருக்கும்).

மிளகாத் தண்ணி[தொகு]

முல்லிகாடனி

முல்லிகாடனி (Mulligatawny) என்று ஆங்கிலோஇந்தியரால் பரப்பப்பட்டுள்ள ஓர் தமிழக இரச வகையாகும்.[1]

மிளகுத் தண்ணீர் என்பதே மருவி ஆங்கிலத்தில் முல்லிகாடனி என்று வழங்கப்படலாயிற்று.[2]

இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.[3] மேற்கு நாடுகளில், இது சற்றே மஞ்சளாக கோழிக்கறித்துண்டுகள், இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூடுதலாக்கப்படுகிறது.

மற்ற பெயர்கள்[தொகு]

சாற்றும் அமுது என்றும் ரசத்துக்கு ஒரு பெயருண்டு. சுருக்கமாக சாத்துமது என சொல்வார்.

ஈயப்பாத்திரம்[தொகு]

ஈயப்பாத்திரத்தில் சமைத்த ரசம் அதிக சுவையாக இருக்கும். சமைக்கும் பொழுதே அதிகமாக மணக்கும்.

தயாரிப்பு முறை[தொகு]

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிப் போடப்படும். பிறகு புளிக்கரைசலை ஊற்றப்படும். நல்ல மிளகு, சீரகம், பூண்டு ஆகியவை நன்கு அரைக்கப்பட்டு இதனுடன் சேர்க்கப்படும். தேவையான உப்பு சேர்த்து சற்று கொதித்தவுடன் கொத்தமல்லி இலை போடப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Southall, Helen (1990). Good Housekeeping: The New Cookery Encyclopedia. London: Ebury Press. பக். 289. 
 2. Hess, Karen; Weir, Robert M.; Stoney, Samuel G. (1998). The Carolina Rice Kitchen: The African Connection. Univ of South Carolina Press. 
 3. Sahni, Julie (2001). Indian Regional Classics. Ten Speed Press. பக். 23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசம்_(உணவு)&oldid=1901586" இருந்து மீள்விக்கப்பட்டது