வெண்ணெய் தோசை
Jump to navigation
Jump to search
![]() | |
மாற்றுப் பெயர்கள் | தாவணகெரே வெண்ணெய் தோசை |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தாவணகெரே |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, வெண்ணெய் |
![]() ![]() |
வெண்ணெய் தோசை (ஆங்கிலம்:Benne dosa, கன்னடம்: ಬೆಣ್ಣೆದೋಸೆ) என்பது தோசை வகைகளுள் ஒன்று. இது கர்நாடகா மாநிலத்தின் தாவணகெரே நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கர்நாடக உணவாகும்[1][2][3].
சாதாரணமாகச் சுடப்படும் தோசை மேல், எண்ணெய் அல்லது நெய்க்குப் பதிலாக, வெறும் வெண்ணெயை மட்டும் பயன்படுத்தி சுடுவதால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தோசைக்கு மேலே தாராளமாக வெண்ணெய் தூவப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் இத் தோசை மென்மையாகவும் மணமாகவும் உள்ளது.
தாவணகெரேயுடன் தொடர்புபடுத்தப்படும் இந்த வெண்ணெய் தோசை, கர்நாடகாவின் பிரபலமான உணவு விடுதிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இத் தோசை கிடைக்கும் உணவு விடுதிகள் உள்ளன.[1][2][3]