சோலா பட்டுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோலா
மாற்றுப் பெயர்கள்பட்டுரா சன்னா, சோலா பூரி
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை உணவு, சிற்றுண்டி
பகுதிஇந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதி
தொடர்புடைய சமையல் வகைகள்இந்தியா, பாக்கித்தான்
முக்கிய சேர்பொருட்கள்கொண்டைக் கடலை, மைதா
வேறுபாடுகள்பனீர் பட்டுரா, பூரி பாஜி, சோலா குல்ச்சா

சோலா பட்டுரா (Chole Bhature: இந்தி: छोले भटूरे) என்பது வட இந்தியாவில் தோன்றிய ஒரு உணவு வகையாகும். இருப்பினும், இந்தியாவில், தில்லியில் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது.[1] இது கொண்டைக் கடலையுடன் தயாரிக்கப்பட்ட மசாலா (சன்னா மசாலா) மற்றும் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பூரி ஆகியவற்றின் கலவையாகும். [2] இது கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் தோன்றிய உணவு.[3] பாக்கித்தானில் காலை உணவாக இந்த உணவு மிகவும் பிரபலமானது. [4] சோலா பட்டுரா மற்றும் அல்வா பூரி ஆகியவற்றின் முக்கிய வேறுபாடு என்னவென்றால், அல்வா பூரி அல்வாவுடன் கூடுதலாக வழங்கப்படுகிறது.

சில நேரங்களில் லஸ்ஸியுடன் காலை உணவாக உண்ணப்படுகிறது. இது தெரு உணவு அல்லது முழுமையான உணவாகவும் இருக்கலாம். மேலும் வெங்காயம், ஊறுகாய் தயாரிக்கப் பயன்படும் கேரட், பச்சை சட்னி அல்லது ஊறுகாய் ஆகியவற்றுடன் பரிமாறப்படும்.[5]

அல்வா பூரி[தொகு]

அல்வா பூரி
அல்வா பூரி

அல்வா பூரி என்பது இந்திய துணைக் கண்டத்தின் வேர்களைக் கொண்ட ஒரு பாக்கித்தானின் உணவாகும். [6] இந்தியாவில் சோலா பட்டுரா என்று அழைக்கப்படும் இந்த உணவில் அல்வாவுடன் கொண்டைக்கடலை மசாலா அல்லது பூரி/பாஜியுடன் உண்ணப்படுகிறது. குறிப்பாக இது பாக்கித்தான், இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற பகுதிகளின் உணவுகளில் பிரபலமாக இருக்கிறது. [7]

இந்த உணவு இந்திய துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதிகளில், முக்கியமாக உத்தரபிரதேசத்தில் தோன்றியது. நேபாளத்தின் அடிவாரப் பகுதியான தெராய் பிராந்தியத்திலும், குறிப்பாக மதேசி சமூகத்திலும் இந்த உணவு பிரபலமாக உள்ளது. இது உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அல்வா பூரி எல்லா நேரங்களிலும் சாப்பிடப்படுகிறது. ஆனால் இது பொதுவாக காலை உணவாகாவோ அல்லது தாமதமான காலை உணவாகவோ இருக்கிறது. பாக்கித்தானில் நிகாரி மற்றும் அல்வா பூரி ஆகியவைகளை காலை உணவில் சேர்ப்பது லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள மக்களிடையே பிரபலமானது.

குறிப்புகள்[தொகு]

  1. Chanchal's, Kitchen. "Chole Bhature recipe". Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-12-23.
  2. Sharma, Samreedhi (March 14, 2007). "Calorie watch: bhatura chole vs Puri bhaji".
  3. Galanakis, Charis M. (2020-09-22) (in en). Gastronomy and Food Science. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-820438-2. https://books.google.co.in/books?id=-bvbDwAAQBAJ&pg=PA214&dq=Bhature+uttar&hl=en&sa=X&ved=2ahUKEwje_O7E_N_tAhVe83MBHbxoA7EQ6AEwA3oECAMQAg#v=onepage&q&f=false. 
  4. Ritu Chaturvedi. "6 Indo-Pak recipes that define cross-border foodie love". Khaleej Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  5. "North Indian Cuisine: Recipes, History And The Best Restaurants In Delhi, Nyc And London". 5 July 2013. Archived from the original on 4 September 2018. பார்க்கப்பட்ட நாள் 28 January 2017.
  6. "Ayeza Khan cooks Halwa Puri for family with love". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  7. Ritu Chaturvedi. "6 Indo-Pak recipes that define cross-border foodie love". Khaleej Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலா_பட்டுரா&oldid=3556275" இலிருந்து மீள்விக்கப்பட்டது