மீன் தலைக் கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீன் தலைக் கறி
Fish head curry
Fisheadcurry.JPG
இந்திய மீன் தலைக் கறி
மாற்றுப் பெயர்கள்கறி கெப்லா இகன் (மலாய் மொழி, இந்தோனேசியா)
வகைகிரேவி
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
தொடங்கிய இடம்மலேசியா
பகுதிஇந்தோனேசியா முழுவதும்]], மலேசியா & சிங்கப்பூர்
ஆக்கியோன்(இந்தியாவில் தோற்றம்)
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாகவோ மிதச் சூடாகவோ
முக்கிய சேர்பொருட்கள்சிவப்பு சினாப்பர் தலை, வெண்டைக்காய், கத்தரிக்காய்
[[wikibooks:Special:Search/Cookbook: மீன் தலைக் கறி
Fish head curry|Cookbook: மீன் தலைக் கறி
Fish head curry]]  [[commons:Special:Search/மீன் தலைக் கறி
Fish head curry|Media: மீன் தலைக் கறி
Fish head curry]]
பெரனகன் மீன் தலை கறி

மீன் தலைக் கறி (Fish head curry)(மலாய் மற்றும் இந்தோனேசிய: கரி கெப்லா இகான்) என்பது இந்தோனேசியா,[1] மலேசிய மற்றும் சிங்கப்பூர் சமையல்வகைளுள் ஒன்றாகும். இது இந்திய மற்றும் சீனாவில் தோன்றிய உணவு கலப்பு ஆகும்.[2] சிவப்பு ஸ்நாப்பர் மீனின் தலையானது கேரளா தயாரிப்பு முறையில் நன்றாகச் சுண்டவைக்கப்பட்டு காய்கறிகள் வெண்டி மற்றும் கத்தரி சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. வழக்கமாகச் சோறு அல்லது ரொட்டியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

சிங்கப்பூரில் உள்ள உணவகங்களுக்குத் தென்னிந்திய உணவு வகைகளைக் கொண்டு செல்லஇந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் எம். ஜே. கோமசு இந்த மீன் தலைக் கறியினை கண்டுபிடித்தார் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் மீன் தலை பரவலாக உண்ணப்படவில்லை என்றாலும், சீன வாடிக்கையாளர்கள் இதை ஒரு சிறப்புச் சுவையாகக் கருதினர்.[3]

இந்திய, மலாய், சீன மற்றும் பெரானகன் உணவகங்கள் அனைத்தும் இந்த உணவின் மாறுபாடுகளுடன் பரிமாறுகின்றன. மீன் தலை கறி சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான உணவாக மாறியுள்ளது. $10 முதல் $20 வரை இதன் விலையுள்ளது. இது பொதுவாக மலிவான ஹாக்கர் கட்டணமாகக் கருதப்படுவதில்லை. இது பொதுவாக ஒரு களிமண் பானையில் பரிமாறப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் ஹாக்கர் மையங்கள் மற்றும் அக்கம் பக்க உணவுக் கடைகளில் விற்கப்படுகிறது.[சான்று தேவை]

தயாரிப்பு[தொகு]

புளிச் சாறு கிரேவியில் அடிக்கடி சேர்க்கப்படுவதால், உணவானது இனிப்பு-புளிப்புச் சுவையினைத் தருகிறது. இந்த வகை மீன் தலைக் கறியில் குறைந்த அளவிலான, ஆரஞ்சு கிரேவியும் உள்ளது.[சான்று தேவை]

இந்த உணவில் தேங்காய்ப் பாலினையும் சேர்க்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Inc, Tastemade. "Gulai Kepala Ikan ~ Resep". Tastemade.
  2. "Fish head curry (gulai kepala ikan)". SBS.
  3. "The man behind fish head curry". The Straits Times. 10 December 2017. https://www.straitstimes.com/singapore/the-man-behind-fish-head-curry. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_தலைக்_கறி&oldid=3198386" இருந்து மீள்விக்கப்பட்டது