கோம்பிடி வடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடை சகோட்டி
வகைகறி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமகாராட்டிரம்
முக்கிய சேர்பொருட்கள்கோழிக் கறி, அரிசி மாவு அல்லது எப்போதாவது கோதுமை, கேழ்வரகு மாவு, வெங்காயம், எலுமிச்சை சாறு, தேங்காய்ப்பாலில் செய்யப்படும் குழம்பு)

கோம்பிடி வடை (Kombdi vade) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் கொங்கண் பகுதிக்கு சொந்தமான ஒரு உணவாகும். இது ஒரு பாரம்பரிய கோழி கறி (எலும்புகள் கொண்ட கோழி துண்டுகள் உட்பட), வடை (அரிசி மாவு எப்போதாவது கோதுமை, கேழ்வரகு மாவினால் செய்யப்படுவதுண்டு), வெங்காயம், எலுமிச்சை சாறு மற்றும் சோல்காதி ( தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படும் குழம்பு) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கொங்கணியின் ராய்கட், இரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் "கட்டாரி" "கௌரி நோன்பு", "தேவ் தீபாவளி" மற்றும் "சிம்கா" போன்ற நாட்களில் இந்த உணவு முக்கியமாக தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இந்த உணவு ஆண்டு முழுவதும் குறிப்பாக மும்பை உட்பட மகாராட்டிராவின் கடலோரப் பகுதியில் கிடைக்கிறது. [1] [2] [3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்பிடி_வடை&oldid=3077733" இருந்து மீள்விக்கப்பட்டது