ஐதராபாத்து பிரியாணி
ஐதராபாத்து பிரியாணி | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | ஆந்திரப் பிரதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | பாசுமதி, இறைச்சி |
ஐதராபாத்து பிரியாணி (Hyderabadi biriyani) என்பது ஒரு பிரியாணி உணவு வகை ஆகும். இது பாசுமதி அரிசி மற்றும் செம்மறி ஆட்டுக் கறி ஆகியவை கொண்டு சமைக்கப்படுகிறது.[1] தற்போதைய ஆந்திரப் பிரதேசின் ஐதராபாத்து நகரம் ஐதராபாத் நிசாம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது அவர்களது அரண்மனை சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டது..[2][3]
சேர்மானப் பொருட்கள்
[தொகு]பாசுமதி அரிசி, தயிர், வெங்காயம், எலுமிச்சை, கொத்தமல்லி, வாசனைப் பொருட்கள் மற்றும் இறைச்சியாக செம்மறியாடு அல்லது வெள்ளாடு அல்லது கோழி ஆகியவை.[1]
வகைகள்
[தொகு]ஐதராபாத்து பிரியாணி அதை தயாரிக்கும் முறையைக் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அவை, கச்சி பிரியாணி மற்றும் பாக்கி பிரியாணி ஆகியவை.[4]
கச்சி பிரியாணி
[தொகு]இதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்த்து கலக்கி இரவு முழுவதும் வைத்திருக்கப்படும். பின்னர் சமையலுக்கு முன்னர் தயிரோடு கலக்கி சேர்த்து வைத்து அதன் பின்னர் நீராவியில் சமைக்கப்படும்.[5]
பாக்கி பிரியாணி
[தொகு]இதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்ந்து இருக்கும் நேரம் குறைவானதாகும். மேலும் இறைச்சியானது பாசுமதி அரிசியை சமைக்கும் முன்னரே சமைக்கப்படும்.[6] இறைச்சிக்குப் பதிலாக காய்கறிகளைக் கொண்டும் இவ்வகை பிரியாணியைச் செய்யலாம். பொதுவாக இவ்வகை பிரியாணியோடு சேர்ந்து உண்ண தயிரில் வெங்காயம் சேர்த்த உணவைச் சேர்த்துக் கொள்வர்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Colleen Taylor Sen (2004). Food culture in India. Greenwood Publication. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-32487-5. பார்க்கப்பட்ட நாள் 12 october 2011.
{{cite book}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Andhra Pradesh / Hyderabad News : Legendary biryani now turns `single'". The Hindu. 2005-08-18. Archived from the original on 2007-03-29. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
- ↑ "Of biryani, history and entrepreneurship - Rediff.com Business". In.rediff.com. 2004-04-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
- ↑ "Metro Plus Chennai / Eating Out : Back to Biriyani". The Hindu. 2005-06-13. Archived from the original on 2009-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
- ↑ "Kacchi Biryani".
- ↑ "pakki Biryani".