சக்கினாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்கினாலு
Sakinalu, dark and light-2159.jpg
வகைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதெலங்காணாவின் வட கிழக்குப் பகுதி
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு
Cookbook: சக்கினாலு  Media: சக்கினாலு

சக்கினாலு (Sakinalu) என்பது இந்தியாவின் தெலங்கானாவின் வடக்கு பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் ஒரு சிறப்பு வகை சிற்றுண்டியாகும். இது எண்ணெயில் பொரித்த அரிசி மாவுடன் கலந்து வட்டமாகச் செய்யப்படுகிறது. [1] [2] இது மகர சங்கராந்தி பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது. [3] மணமகளின் பெற்றோர்களால் மணமகனின் பெற்றோருக்கு இது வழங்கப்படுகிறது. [4]

தேவையான பொருட்கள்[தொகு]

சிறிய அளவிலான மசாலா, எள், ஓம விதைகள், மற்றும் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட அரிசி மாவுடன் சக்கினாலு தயாரிக்கப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

"சக்கினாலு" என்ற சொல் "சக்கினாமு" என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இது "சக்ரம்" என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது சக்கரம் அல்லது வட்டம் . அதன் வட்ட வடிவமே இதற்குக் காரணம். மகர சங்கராந்தியின் போது உழவின் புதிய நெல் அறுவடை செய்யப்படும் போது உழவர் சமூகம் இந்த பாரம்பரிய திருவிழா உணவைத் தயாரிக்கிறது.

தரம்[தொகு]

இது தெலங்கானா பாரம்பரிய விழா உணவுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கினாலு&oldid=3077725" இருந்து மீள்விக்கப்பட்டது