எலுமிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலுமிச்சை
Lemon.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae]
பேரினம்: Citrus
இனம்: C.× limon
இருசொற் பெயரீடு
Citrus × limon, often given as C. limon
(லின்.) பர்ம்.எஃப்.
A yellow lemon fruit and a lemon மலர்.

எலுமிச்சை (lemon) புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது தேசிக்காய் (lime), தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது உண்டு. இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

வரலாறு[தொகு]

இது இந்தியா, வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும், இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. இது முதலில் பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் பின்னர் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இஸ்லாமியப் பூங்காக்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் இது அரபு உலகிலும், நடுநிலக்கடல் பகுதிகளிலும் இது பரவியிருந்தது.[1]

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.[2]

உற்பத்தி[தொகு]

அதிக அளவு எலுமிச்சை உற்பத்தி செய்யும் நாடுகள் (டன்னில்)
நாடு 2010 2011 2014
 இந்தியா 2 629 200 2 108 000 தரவு இல்லை
 மெக்சிக்கோ 1 891 400 2 147 740 2 255 000
 அர்கெந்தீனா 1 113 380 1 228 660 1 100 000
 சீனா 1 058 105 1 313 394N தரவு இல்லை
 பிரேசில் 1 020 350 1 126 740 தரவு இல்லை
 அமெரிக்கா 800 137 834 610 806 000
 துருக்கி 787 063 790 211 680 000
 ஈரான் 706 800F 560 052F தரவு இல்லை
 எசுப்பானியா 578 200F 700 000F தரவு இல்லை
 இத்தாலி 522 377 483 088 no data
உலகம் 13 032 388F 13 861 411A
Without footnote — official data, F = FAO estimation, A =aggregated data (includes official, and estimated data), N = unofficial data;

ஆதாரம்: ஐநா உணவு மற்றும் வேளாண்மைப்பு[3] *அனைத்து எலுமிச்சையினங்களை உள்ளடக்கியது

மேற்கோள்கள்[தொகு]

  1. எலுமிச்சை சாறு நன்மைகள்
  2. எலுமிச்சை
  3. "Production/Crops of Lemons and Limes, World by Countries". Food and Agriculture Organization of the United Nations, Statistics Division (FAOSTAT) (2014). பார்த்த நாள் 22 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுமிச்சை&oldid=2173325" இருந்து மீள்விக்கப்பட்டது