விளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விளாம்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விளா
Wood-apple dec2007.jpg
விளாம் பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
துணைக்குடும்பம்: Aurantioideae
சிற்றினம்: Citreae
பேரினம்: Limonia
L.
இனம்: L. acidissima
இருசொற் பெயரீடு
Limonia acidissima
L.

விளா இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து பழங்களைத் தரும் ஒரு மரம். இம்மரத்தின் பழம் விளாம்பழம் எனப்படுகின்றது. விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும். இது பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்தது. தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது

விளாம்பழம்[மூலத்தைத் தொகு]

விளாம்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.

மருத்துவப் பயன்கள்[மூலத்தைத் தொகு]

மரத்தில் தொங்கும் விளாம் பழம்.
 • சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொதுவான குணமாகும்.
 • இதன் பழமானது கோழையை அகற்றிப் பசியுண்டாக்கும் வல்லமை பெற்றது.
 • இதன் பழஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கக் கூடியது.
 • இது பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யவல்லது.
 • விளாம்பழமானது வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றுவதுடன் வயிற்றுப் புண்களையும் ஆற்றக்கூடியது.
 • இதன் பழமானது நாவறட்சியையும், விக்கலையும் தீர்க்க வல்லது.
 • இது வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது.
 • இது ஒவ்வாமை நோய், இரத்த போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது.
 • விளாம்பழமானது பெண்களுக்கு ஏற்படும் மார்பகம், மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களை வராமல் தடுக்கக் கூடியது. [1]
 • விளாம்பழம் இதயத்திற்கு சக்தியை அளிக்கிறது.
 • வயிறு மற்றும் குடலுக்குச் சக்தி தருகிறது. விளாம்பழம் பித்த குணமுள்ளவர்களுக்கும், பித்தத்தால் உண்டாகும் நோய்களுக்கும் பயன்தரக் கூடியது.
 • வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
 • இதன் பழத்தை கசாயமாக்கி வாய் கொப்பளித்தால் தொண்டையில் உண்டாகும் புண் மற்றும் கொப்புளங்களைக் குணமாக்கும்.
 • தொண்டை வலியைப் போக்கவும், பல்லீறுகளுக்கு உறுதியளிக்கவும் இதைக் குடிப்பார்கள்.
 • விளாமரப்பட்டையை அரைத்து படை, வெண்குஷ்டம் ஆகியவற்றின் மீது பூசுவார்கள். இதன் வேர்ப்பட்டையை எடுத்துச் சாறு பிழிந்து அதிலிருந்து 50 கிராம் சாறெடுத்து அத்துடன் 7 எண்ணிக்கை மிளகு, 7 சொட்டு பசு நெய் கலந்து குடிப்பதால், குழந்தை பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்குச் சக்தி கிடைக்கும்.
 • பித்த கொதிப்பைத் தணிக்க இதன் இலைச்சாற்றுடன் சிறிது வெண் சீரகம் மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பார்கள்.
 • இதன் குச்சியால் ஈறுகள் பலப்படுகிறது.

வெவ்வேறு மொழிகளில்[மூலத்தைத் தொகு]

படத்தொகுப்பு[மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

 1. http://tamil.oneindia.com/art-culture/essays/2011/health-benefits-bel-fruit-aid0174.html
 2. Feronia elephantum on treknature
 3. S G Joshi, Medicinal Plants, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi, 2004, ISBN 81-204-1414-4, p.347
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளா&oldid=2039499" இருந்து மீள்விக்கப்பட்டது