நேந்திரம் (வாழை)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நேந்திரம் என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. கேரளத்திலும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. நேந்திரன் வாழைமரமானது 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. குலைக்கு 10 முதல் 12 சீப்புகள் வரும். ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும். [1]
பயன்கள்[தொகு]
இது பெரும்பாலும் பழமாகவோ அல்லது பழ பஜ்ஜியாகவோ உண்ணப்படுகிறது. நேந்திரம் காய் அல்லது ஏத்தங்காய் சிப்ஸ் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஒரு வாழைப்பழத்தை ஒரு ஆள் சாப்பிட முடியாது: கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை". கட்டுரை. தி இந்து (2017 சூன் 3). பார்த்த நாள் 3 சூன் 2017.