ஆல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்
Banyan botanical c1800-1830.jpg
ஆலமரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: Urticales
குடும்பம்: மொராசியே
பேரினம்: ஆலினம்
துணைப்பேரினம்: உரோஸ்டிக்மா
இனங்கள்

பல

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

பெயர்[தொகு]

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.[1] அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[2]

பயன்[தொகு]

  • ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
  • நல்ல நிழல் தரும்.[3]
  • இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
  • ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
  • பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
  • இது நல்ல நிழல் தருகிறது

சிறப்பு[தொகு]

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
  • சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.[4]
  • திருவாலங்காடு என்னும் ஊர் இம்மரத்தால் சிறப்புப் பெற்றுள்ளது
  • 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க' என வாழ்த்துவர்.
  • இன்றும் பல ஊர்களில் கிராமக் கூட்டங்கள் ஆலமரத்தடியில் நடைபெறுகின்றன.[5]
  • திருஅன்பிலாலந்துறை, பழுவூர், திருவாலம்பொழில் முதலிய சிவத்தலங்களில் ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது.[6]

இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.[7]

சொல்லின் வேர்[தொகு]

அல் மற்றும் அலை என்பதற்கு அலைதல், விரித்தல் என்று பொருள். ஆலமரம் அலைந்து விரிந்து வளரும் மரம் என்பதால் "ஆல் "என்று பொருள். அதே போல ஆலை என்பதற்கு அலைந்த விரிந்த இடம் என்றும் பொருளுண்டு.

பழமையான ஆலமரம்[தொகு]

சென்னை அடையாற்றில் 450 ஆண்டுகள் கடந்த பழமையான ஆலமரமொன்று பாதுகாக்கபட்டு வருகின்றது.[8][9]

படத்தொகுப்பு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அகல் > ஆல்
    பகு < பகல் > பால்
    துகள் > தூள்
    விழுது > வீழ்
  2. மரத்தின் உறுப்புகளில் ஒன்று வீழ் - தொல்காப்பியம் மரபியல் 90
    ஐது வீழ் இகுபெயல் (மழை விழுதல்) - சிறுபாணாற்றுப்படை 8
  3. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
    தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
    நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
    அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
    மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே - வெற்றிவேற்கை
  4. ஆலமர் செல்வன் அணிசல் பெருவிறல் கலித்தொகை - 81
  5. http://www.indg.in/primary-education/childrenscorner/national-symbols/ba4bc7b9abbfbaf-baebb0baebcd[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-23 அன்று பார்க்கப்பட்டது.
  8. http://www.thehindu.com/news/cities/chennai/survivors-of-time-long-before-chennai-there-stood-a-tree/article2141956.ece
  9. "சென்னை அடையாறு ஆலமரம் 450 வயதை கடந்தது மாலைமலர் செப்டம்பர் 17 2013". 2013-09-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-23 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்&oldid=3683414" இருந்து மீள்விக்கப்பட்டது