உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளப் புலி
Bengal TIger
வங்காளப் புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
துணையினம்:
வங்காளப் புலி (tigris)
முச்சொற் பெயரீடு
பாந்தெரா டைக்ரிஸ் டைக்ரிஸ்
Panthera tigris tigris

(L, 1758)

வங்காளப் புலி (Panthera tigris tigris) புலியினத்தில் ஒரு சிற்றினம் ஆகும்.[2] பூனை குடும்பத்தில் இன்று வாழும் மிகப்பெரிய உயிரினங்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4][5]

இந்தப் புலிகள் இந்திய துணைக்கண்டத்தில் ஏறத்தாழ 12,000 முதல் 16,500 ஆண்டுகள் முன்பிருந்து வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[6][7][8] இன்று வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்றவற்றால் இந்த இனம் அச்சுறுத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு 2,500க்கும் குறைவான புலிகளே காட்டு பகுதிகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[9]

வங்காளப் புலி 19 ஆம் நூற்றாண்டு வரை மேற்கே சிந்து நதி பள்ளத்தாக்கிலிருந்து கிட்டத்தட்ட இந்தியா முழுவதும், பாக்கித்தான், தெற்கு நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மார் மற்றும் தென்மேற்கு சீனா ஆகிய நாடுகளில் காணப்பட்டது. ஆனால் இன்று, இது இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் தென்மேற்கு சீனாவில் மட்டுமே வாழ்கிறது.[7] 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி இவற்றில் பெரும்பாலான புலிகளின் (ஏறத்தாழ 2,603–3,346) இந்தியாவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் அதன் வசிப்பிடங்களை பாதுகாக்க இந்திய அரசால் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவை காடுகள், வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன. இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கருப்புக்கோடுகளுடன் காணப்படுகிறது. எனினும் வெள்ளைப்புலிகளும் உண்டு. வங்காளப் புலி, இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய விலங்காக உள்ளது.

உடலியற் பண்புகள்

[தொகு]
ஆண் புலியின் முகம்

வங்காளப் புலியின் தோல் மஞ்சள் அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில், அடர் பழுப்பு முதல் கருப்பு நிற கோடுகளை கொண்டிருக்கும். இதன் வயிறு மற்றும் கைகால்களின் உட்புற பாகங்கள் வெண்மையாகவும், வால் இளஞ்சிவப்பு நிறத்தில் கருப்பு வளையங்களுடன் இருக்கும். உடல் முழுவதும் வெள்ளை நிறம் கொண்ட புலிகளும் காணப்படுகின்றன.[10] வங்காளப் புலிகள் பெரும்பாலும் உடலின் மீது 21–29 கோடுகளைக் கொண்டுள்ளன.[11] சில நேரங்களில் தங்க நிற தோலில் சிவப்பு-பழுப்பு நிற கோடுகளுடன் இருக்கும் புலிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.[12][13]

புலியின் மண்டை ஓடு சராசரியாக ஆண் புலிகளில் 35.1 செ. மீ. மற்றும் பெண் புலிகளில் 29.3 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கிறது.[14]இது தடிமனான பற்களைக் கொண்டுள்ளது. இதன் கோரை பற்கள் 7.5 முதல் 10 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கிறது.[15]

ஆண் புலிகள் 283 முதல் 311 செ. மீ. மற்றும் பெண் புலிகள் 255 முதல் 285 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.[16] இவை பொதுவாக 90 முதல் 110 செ. மீ. வரை தோள்பட்டை உயரம் கொண்டதாக இருக்கின்றன.[17] ஆண் புலிகள் 200 முதல் 260 கிலோ எடையும், பெண் புலிகள் 110 முதல் 180 கிலோ எடையும் கொண்டிருக்கின்றன.[18]

பரம்பல்

[தொகு]
இந்தியாவில் ஒரு ஆண் வங்கப் புலி

ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டங்கள் தாழ்த்வாக இருந்த காலத்தில் புலிகள் இலங்கைக்கு வந்ததாகத் தெரிகிறது.[19] பின்னர் இவை நிலப்பாலத்தால் இணைக்கப்பட்டிருந்த தென்னிந்தியாவிற்கு வந்திருக்கலாம்.[20] வங்காளப் புலி 19 ஆம் நூற்றாண்டு வரை மேற்கே சிந்து நதி பள்ளத்தாக்கிலிருந்து கிட்டத்தட்ட இந்தியா முழுவதும், பாக்கித்தான், தெற்கு நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மார் மற்றும் தென்மேற்கு சீனா ஆகிய நாடுகளில் காணப்பட்டது. ஆனால் இன்று, இது இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் தென்மேற்கு சீனாவில் மட்டுமே வாழ்கிறது.[7] இந்திய துணைக்கண்டத்தில், புலிகள் வெப்பமண்டல ஈரமான பசுமைமாறாக் காடுகள், வெப்பமண்டல உலர் காடுகள், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகள், சதுப்பு நிலங்கள், மிதமான மேட்டு நிலக் காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கின்றன.[21]

2008 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது, இந்தியாவில் ​​மொத்த புலிகளின் எண்ணிக்கை 1,411 என மதிப்பிடப்பட்டது. இந்தியா முழுவதும், புலிகள் வசிக்கும் ஆறு இயற்கை வளாகங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அவை பின்வருமாறு:[22]கங்கை சமவெளி, மத்திய இந்திய மலைப்பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலை, பிரம்மபுத்திரா வெள்ள சமவெளிகள் மற்றும் சுந்தர்பனி சதுப்புநில காடுகள்.[21][23][24] 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி இவற்றில் பெரும்பாலான புலிகளின் (ஏறத்தாழ 2,603–3,346) இந்தியாவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[25]

2004 ஆம் ஆண்டு நிலவரப்படி, வங்காளதேசத்தில் 200 முதல் 419 புலிகள் வரை இருந்தன, இவைகளில் பெரும்பாலானவை சுந்தர்பனி காடுகளில் உள்ளன.[26] 2017 இல், வங்காளதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 84–158 ஆக மதிப்பிடப்பட்டது.[27] 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை 163-235 ஆகா உள்ளது.[28] 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, பூட்டானில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 89 முதல் 124 என மதிப்பிடப்பட்டுள்ளது.[29] மேலும் சீனாவின் சில பகுதிகளில் இந்தப் புலிகள் தென்படுகின்றன.[30]

சூழலியல் மற்றும் நடத்தை

[தொகு]
ஒரு பெண் புலி ஆற்றில் நீந்துகிறது

புலியின் அடிப்படை சமூக அலகு ஒரு பெண் மற்றும் அதன் சந்ததியினரால் ஆனது. சில சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே பல வயதுவந்த புலிகள் தற்காலிகமாக கூடுகின்றன. இல்லையெனில் இவை பொதுவாக தனித்தனியாக வாழ்கின்றன. தனித்தனியாக காடு மற்றும் புல்வெளி விலங்குகளை வேட்டையாடுகின்றன. எந்தவொரு பாலினத்திலும் வசிக்கும் புலிகள் தனது வரம்புக எல்லைளைப் பாதுகாக்கிறார்கள். பெண் புலிகள் அவற்றின் குட்டிகளுக்கு தேவையான இரை, தண்ணீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை அளிக்கின்றன. தேவைப்படும் நேரத்தில் மட்டுமே மற்ற புலிகளுடன், குறிப்பாக எதிர் பாலினத்தவர்களுடனும் தொடர்பைப் பேணுகின்றன. பொதுவாக ஒரு நிலப்பகுதியை பகிர்ந்துகொள்ளும் புலிகள் மற்ற புலிகளின் அசைவுகளையும் செயல்பாடுகளையும் நன்கு அறிந்துவைத்திருக்கின்றன.[10] புலிகள் 19 மாத வயதில் தங்கள் பிறந்த பகுதிகளிலிருந்து வெளியேறி தனியாக வாழ்க்கையை தொடங்குகின்றன. ஆய்வு செய்யப்பட்ட புலிகளில், பெண் புலிகள் பொதுவாக ஆண்களை விட தங்கள் தாயின் வீட்டு வரம்பிற்கு நெருக்கமாக இருந்தன.[31]

ஒரு பெண் புலி அதன் குட்டிகளுடன்

ஒரு வயது வந்த ஆண் புலி ஓவர் நாளில் குளிர்காலத்தில் ஏறத்தாழ 10.5 கி.மீ. தூரமும், கோடை காலத்தில் மேலும் ஏறத்தாழ 13.9 கி.மீ. தூரமும் பயணிக்கின்றது. இதன் வசிப்பிடத்தின் வரம்பு ஏறத்தாழ 200 சதுர கி.மீ. வரை பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. பெண் புலிகள் ஏறத்தாழ 31 சதுர கி.மீ. வரை பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை பராமரிக்க வல்லது.[32] பொதுவாக ஆண் புலிகள் பெரிய வசிப்பிட நிலப்பரப்பை பிரத்தியேகமாக வைத்திருக்கின்றன. இவற்றில் மற்ற ஆண் புலிகளுக்கு அனுமதியில்லை. அதே சமயத்தில், இந்த வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் பல பெண் புலிகள் வசிக்கலாம். ஒரு ஆண் புலியின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் வசிக்கும் பெண் புலிகளுடன், அந்த குறிப்பிட்ட ஆண் புலியால் இனச்சேர்க்கை உரிமைகளைப் கோர முடியும். ஒரு வயதான புலி இறந்த பிறகு அல்லது இளம் புலிகளால் விரட்டப்பட்ட பிறகு, அதன் இடத்தை வேறொரு ஆண் புலி ஆக்கிரமிக்கிறது.[10][33] இப்புலிகள் நன்றாக நீந்த வல்லவை.

உணவு

[தொகு]
உணவுண்ட பின் ஓய்வெடுக்கும் ஒரு வங்காளப்புலி

வங்கப் புலிகள் ஊனுண்ணிகள் ஆதலால் இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான காட்டெருமை, மான், ஆடு, காட்டுப்பன்றி போன்றவற்றை வேட்டையாடுகின்றன. இவை மரம் ஏறி முதனிகளையும் வேட்டையாடுகின்றன. இவை மரம் ஏறி குரங்குகள் மற்றும் முதனிகளையும் வேட்டையாடுகின்றன. சில சமயங்களில் முயல், மயில் மற்றும் முள்ளம்பன்றி போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடுகின்றன. புலிகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் நுழைவதால், இவை வீட்டு கால்நடைகளையும் சில சமயங்களில் வேட்டையாடுகிறது. [34][35][36][37][38] வங்காளப் புலிகள் எப்போதாவது சிறுத்தை, முதலை, கரடி மற்றும் செந்நாய் போன்ற விலங்குகளை வேட்டையாடுகின்றன. அவை பொதுவாக வயது முதிர்ந்த இந்திய யானை மற்றும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளை தாக்குவதில்லை, ஆனால் இது போன்ற அசாதாரணமான அரிதான நிகழ்வுகள் சில சமயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[3][39][40] நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் புலிகள் சில நேரங்களில் மீன், நண்டு மற்றும் ஆமை போன்றவவற்றை உண்கின்றன.[41][42]

ஒரு மானைத் தாக்கும் புலி

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், புலிகள் விலங்குகளை பக்கவாட்டிலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ தாக்குகின்றன. முடிந்தவரை நெருங்கிய தூரத்திற்கு அணுகி, இரையின் தொண்டையைப் பிடித்துக் அவற்றை கொல்கின்றன. இவை பொதுவாக இரவிலேயே வேட்டையாடுகின்றன. பொதுவாக இப்புலிகள் வேட்டையாடியதும் இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன. புலியின் வேட்டையாடும் முறை மற்றும் இரை உண்ணும் தன்மை ஆகியவை பருவங்களை பொறுத்து மாறுபடுகின்றன. புலிகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் 40 கிலோ இறைச்சியை உட்கொள்ளும்.[3] ஒரு ஆய்வில், புலிகள் ஆண்டுக்கு ஏறத்தாழ 40-50 விலங்குகளைக் கொன்றன.[43] காயம் அடைந்தாலோ, வயதானாலோ அல்லது இதன் வழக்கமான இரை இனங்கள் அரிதாகிவிட்டாலோ, புலிகள் பெரும்பாலும் மனிதர்களைத் தாக்கும் மனித உண்ணிகளாக மாறுகின்றன.[44]

இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி

[தொகு]
ஒரு ஆண் மற்றும் பெண் புலி

இந்தியாவில் உள்ள புலிகளுக்கு குறிக்கப்பட்ட இனச்சேர்க்கை பருவங்கள் இல்லை. பெரும்பாலான குட்டிகள் திசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிறக்கின்றனர்.[45] மார்ச், மே, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் குட்டிகள் பிறக்கின்றன.[46][47]

ஆண் புலிகள் 4-5 வயதிலும், பெண் புலிகள் 3-4 வயதிலும் முதிர்ச்சி அடைகின்றன. ஒரு வங்காளப் புலி சுமார் 3-9 வார இடைவெளியில் அண்டவிடுப்பிற்கு வருகிறது. இணைசேர்க்கைக்குப் பின் 104-106 நாட்களுக்குப் பிறகு, 1-4 குட்டிகள் உயரமான புல், அடர்ந்த புதர் அல்லது குகைகளில் அமைந்துள்ள தங்குமிடங்களில் பிறக்கின்றன. புதிதாகப் பிறந்த குட்டிகள் 1.6 கிலோ வரை எடையுடன் உள்ளன. இந்தக் குட்டிகள் 3.5-5 மாதங்கள் வரை தடிமனான கம்பளி போன்ற தோல்களைக் கொண்டுள்ளன. பிறக்கும் போது இவற்றின் கண்களும் காதுகளும் மூடப்பட்டுள்ளன, பற்கள் பிறந்து 2-3 வாரங்களில் மெதுவாக வளர ஆரம்பிக்கின்றன. குட்டிகள் 3-6 மாதங்களுக்கு தாய்ப்பால் குடிக்கின்றன, மேலும் 2 மாத வயதில் சிறிய அளவிலான திட உணவை உண்ணத் தொடங்குகின்றன. 5-6 மாத வயதில் பொதுவாக இவை வேட்டையாடும் போது தங்கள் தாயைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்குகிறார்கள். 2-3 வயதில் குட்டிகள் மெதுவாக குடும்பக் குழுவிலிருந்து பிரிந்து தற்காலிகமாக வேறு இடத்திற்கு குடிபெயரத் தொடங்குகின்றன.[3]

அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள்

[தொகு]
ஒரு புலிகள் காப்பகத்தில் விளையாடும் பெண் குட்டிகள்

புலிகளின் இயற்கையான வாழிடங்களை அழிப்பதும் வேட்டையாடுதலும் இப்புலிகளின் முக்கிய அச்சுறுத்தல்களாகும்.[9] அவற்றின் உடலில் இருந்து பல கிழக்கு ஆசிய நாடுகளில் மருந்துகள் செய்யப்படுகின்றன. [48] எனவே, புலிகளின் தோல் தவிர அவற்றின் உடல்பாகங்களுக்காகவும் அவை வேட்டையாடப் படுகின்றன.[49][50][51] புலிகள் மக்கள் வாழும் ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் அவை ஊர் மக்களாலும் சிலநேரம் கொல்லப்படுகின்றன.[52]

இது அருகிய இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.[53][54] புலிகள் மற்றும் அதன் வசிப்பிடங்களை பாதுகாக்க இந்திய அரசால் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.[55][56]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Panthera tigris tigris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Kitchener, A. C.; Breitenmoser-Würsten, C.; Eizirik, E.; Gentry, A.; Werdelin, L.; Wilting, A.; Yamaguchi, N.; Abramov, A. V. et al. (2017). "A revised taxonomy of the Felidae: The final report of the Cat Classification Task Force of the IUCN Cat Specialist Group". Cat News (Special Issue 11): 66–68. https://repository.si.edu/bitstream/handle/10088/32616/A_revised_Felidae_Taxonomy_CatNews.pdf?sequence=1&isAllowed=y. 
  3. 3.0 3.1 3.2 3.3 Mazák, V. (1981). "Panthera tigris". Mammalian Species (152): 1–8. doi:10.2307/3504004. 
  4. Heptner, V. G. & Sludskij, A. A. (1992) [1972]. "Tiger". Mlekopitajuščie Sovetskogo Soiuza. Moskva: Vysšaia Škola [Mammals of the Soviet Union. Volume II, Part 2. Carnivora (Hyaenas and Cats)]. Washington DC: Smithsonian Institution and the National Science Foundation. pp. 95–202.
  5. Sankhala, K. (1978). Tiger: The Story of the Indian Tiger. Glasgow: Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0002161244.
  6. Kitchener, A. C.; Dugmore, A. J. (2000). "Biogeographical change in the tiger, Panthera tigris". Animal Conservation 3 (2): 113–124. doi:10.1111/j.1469-1795.2000.tb00236.x. Bibcode: 2000AnCon...3..113K. 
  7. 7.0 7.1 7.2 Luo, S. J.; Kim, J.; Johnson, W. E.; van der Walt, J.; Martenson, J.; Yuhki, N.; Miquelle, D. G.; Uphyrkina, O. et al. (2004). "Phylogeography and Genetic Ancestry of Tigers (Panthera tigris)". PLOS Biology 2 (12): e442. doi:10.1371/journal.pbio.0020442. பப்மெட்:15583716. 
  8. Cooper, D. M.; Dugmore, A. J.; Gittings, B. M.; Scharf, A. K.; Wilting, A.; Kitchener, A. C. (2016). "Predicted Pleistocene–Holocene rangeshifts of the tiger (Panthera tigris)". Diversity and Distributions 22 (11): 1–13. doi:10.1111/ddi.12484. Bibcode: 2016DivDi..22.1199C. 
  9. 9.0 9.1 Goodrich, J.; Lynam, A.; Miquelle, D.; Wibisono, H.; Kawanishi, K.; Pattanavibool, A.; Htun, S.; Tempa, T. et al. (2015). "Panthera tigris". IUCN Red List of Threatened Species 2015: e.T15955A50659951. https://www.iucnredlist.org/species/15955/50659951. 
  10. 10.0 10.1 10.2 McDougal, C. (1977). The Face of the Tiger. London: Rivington Books and André Deutsch.
  11. Kitchener, A. (1999). "Tiger distribution, phenotypic variation and conservation issues". In Seidensticker, J.; Christie, S.; Jackson, P. (eds.). Riding the Tiger: Tiger Conservation in Human-Dominated Landscapes. Cambridge University Press. pp. 19–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64835-6. Archived from the original on 23 April 2012.
  12. Xu, X.; Dong, G. X.; Schmidt-Küntzel, A.; Zhang, X. L.; Zhuang, Y.; Fang, R.; Sun, X.; Hu, X.S. et al. (2017). "The genetics of tiger pelage color variations". Cell Research 27 (7): 954–957. doi:10.1038/cr.2017.32. பப்மெட்:28281538. பப்மெட் சென்ட்ரல்:5518981. https://www.luo-lab.org/publications/Xu17-CellRes-GoldenTiger.pdf. 
  13. Singh, L. A. K.(2000). "Colour aberration in tiger: its biological and conservation implications". {{{booktitle}}}, Indian Museum.
  14. Kitchener, A. & Yamaguchi, N. (2010) [First published 1987]. "What is a tiger? Biogeography, Morphology, and Taxonomy". In Tilson, R. & Nyhus, P.J. (eds.). Tigers of the World (2nd ed.). Academic Press. p. 55. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-0-8155-1570-8.00004-9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1570-8.
  15. Sunquist, M.; Sunquist, F. (2002). "Tiger Panthera tigris (Linnaeus, 1758)". Wild Cats of the World. University of Chicago Press. pp. 343–372. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-22-677999-7.
  16. Sharma, U. K.; Tr, V.; Gupta, S. K. (2021). Booklet on Growth Data of Physical Characteristics and Use of Tranquilization/Antidote Drugs, Induction Time, Reversal Time for Free Ranging Royal Bengal Tiger (Panthera tigris) (PDF). Panna, Madhya Pradesh: Panna Tiger Reserve.
  17. Karanth, K. U. (2003). "Tiger ecology and conservation in the Indian subcontinent". Journal of the Bombay Natural History Society 100 (2–3): 169–189. http://www.nfwf.org/AM/Template.cfm?Section=Home&TEMPLATE=/CM/ContentDisplay.cfm&CONTENTID=8073. 
  18. Sadhu, A.; Jayam, P.P.C.; Qureshi, Q.; Shekhawat, R. S.; Sharma, S.; Jhala, Y. V. (2017). "Demography of a small, isolated tiger (Panthera tigris tigris) population in a semi-arid region of western India. Appendix 1: Field Guide for Ageing Tigers". BMC Zoology 2 (16). doi:10.1186/s40850-017-0025-y. https://www.researchgate.net/publication/322963058. 
  19. Manamendra-Arachchi, K.; Pethiyagoda, R.; Dissanayake, R.; Meegaskumbura, M. (2005). "A second extinct big cat from the late Quaternary of Sri Lanka". The Raffles Bulletin of Zoology 2005 (Supplement No. 12): 423–434. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s12/s12rbz423-434.pdf. பார்த்த நாள்: 25 April 2009. 
  20. Pocock, R. I. (1929). "Tigers". Journal of the Bombay Natural History Society 33 (3): 505–541. https://archive.org/details/journalofbomb33341929bomb/page/n133. 
  21. 21.0 21.1 Wikramanayake, E.D.; Dinerstein, E.; Robinson, J.G.; Karanth, K.U.; Rabinowitz, A.; et al. (1999). "Where can tigers live in the future? A framework for identifying high-priority areas for the conservation of tigers in the wild". In Seidensticker, J.; Christie, S.; Jackson, P. (eds.). Riding the Tiger: Tiger Conservation in Human-Dominated Landscapes. Cambridge University Press. pp. 255–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64835-6. Archived from the original on 10 March 2012.
  22. Jhala, Y. V.; Gopal, R.; Qureshi, Q., eds. (2008). Status of the Tigers, Co-predators, and Prey in India (PDF). TR 08/001. National Tiger Conservation Authority, Govt. of India, New Delhi; Wildlife Institute of India, Dehradun. Archived from the original (PDF) on 2 June 2013.
  23. Chauhan, D. S.; Singh, R.; Mishra, S.; Dadda, T. & Goyal, S.P. (2006). Estimation of tiger population in an intensive study area of Pakke Tiger Reserve, Arunachal Pradesh, India. Dehradun, India: Wildlife Institute of India.
  24. Adhikarimayum, A. S.; Gopi, G. V. (2018). "First photographic record of tiger presence at higher elevations of the Mishmi Hills in the Eastern Himalayan Biodiversity Hotspot, Arunachal Pradesh, India". Journal of Threatened Taxa 10 (13): 12833–12836. doi:10.11609/jott.4381.10.13.12833-12836. 
  25. Jhala, Y.V.; Qureshi, Q. & Nayak, A.K. (2020). Status of tigers, co-predators and prey in India 2018 (PDF) (Report). New Delhi, Dehradun: National Tiger Conservation Authority, Government of India, Wildlife Institute of India.
  26. Khan, M. M. H. (2004). Ecology and conservation of the Bengal tiger in the Sundarbans Mangrove forest of Bangladesh (PDF) (PhD thesis). Cambridge: University of Cambridge.
  27. Aziz, M. A.; Tollington, S.; Barlow, A.; Greenwood, C.; Goodrich, J. M.; Smith, O.; Shamsuddoha, M.; Islam, M. A. et al. (2017). "Using non-invasively collected genetic data to estimate density and population size of tigers in the Bangladesh Sundarbans". Global Ecology and Conservation 12: 272–282. doi:10.1016/j.gecco.2017.09.002. 
  28. Dhakal, M.; Karki (Thapa), M.; Jnawali, S. R.; Subedi, N.; Pradhan, N. M. B.; Malla, S.; Lamichhane, B. R.; Pokheral, C. P.; Thapa, G. J.; Oglethorpe, J.; Subba, S. A.; Bajracharya, P. R. & Yadav, H. (2014). Status of Tigers and Prey in Nepal. Department of National Parks and Wildlife Conservation (Report).
  29. Dorji, S.; Thinley, P.; Tempa, T.; Wangchuk, N.; Tandin; Namgyel, U. & Tshewang, S. (2015). Counting the Tigers in Bhutan: Report on the National Tiger Survey of Bhutan 2014 – 2015 (Report). Thimphu, Bhutan: Department of Forests and Park Services, Ministry of Agriculture and Forests.
  30. Qiu, M.; Zhang, M.; Liu, W. (1997). "A preliminary study on the Bengal tiger (Panthera tigris tigris) in Namcha Barwa, southeastern Tibet". Acta Theriologica Sinica 17 (1): 1–7. 
  31. Smith, J. L. D. (1993). "The role of dispersal in structuring the Chitwan tiger population". Behaviour 124 (3): 165–195. doi:10.1163/156853993X00560. 
  32. Chundawat, T. S.; Gogate, N.; Johnsingh, A. J. T. (1999). "Tigers in Panna: preliminary results from an Indian tropical dry forest". In Seidensticker, J.; Christie, S.; Jackson, P. (eds.). Riding the Tiger: Tiger Conservation in Human-Dominated Landscapes. Cambridge University Press. pp. 123–129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64835-6.
  33. Barlow, A. C. D.; McDougal, C.; Smith, J. L. D.; Gurung, B.; Bhatta, S. R.; Kumal, S.; Mahato, B.; Tamang, D. B. (2009). "Temporal Variation in Tiger (Panthera tigris) Populations and Its Implications for Monitoring". Journal of Mammalogy 90 (2): 472–478. doi:10.1644/07-MAMM-A-415.1. https://archive.org/details/sim_journal-of-mammalogy_2009-04_90_2/page/472. 
  34. Bagchi, S.; Goyal, S. P.; Sankar, K. (2003). "Prey abundance and prey selection by tigers (Panthera tigris) in a semi-arid, dry deciduous forest in western India". Journal of Zoology 260 (3): 285–290. doi:10.1017/S0952836903003765. http://sumantabagchi.weebly.com/uploads/1/0/0/6/10062513/bagchi_et_al_j_zool_2003_tiger_diet.pdf. 
  35. Andheria, A. P.; Karanth, K. U.; Kumar, N. S. (2007). "Diet and prey profiles of three sympatric large carnivores in Bandipur Tiger Reserve, India". Journal of Zoology 273 (2): 169–175. doi:10.1111/j.1469-7998.2007.00310.x. https://www.conservationindia.org/wp-content/files_mf/51.-Andheria-et-al_2007_Journal-of-Zoology_Dietprey.pdf. 
  36. Biswas, S.; Sankar, K. (2002). "Prey abundance and food habit of tigers (Panthera tigris tigris) in Pench National Park, Madhya Pradesh, India". Journal of Zoology 256 (3): 411–420. doi:10.1017/S0952836902000456. 
  37. Wegge, P.; Odden, M.; Pokharel, C. Pd.; Storaasc, T. (2009). "Predator–prey relationships and responses of ungulates and their predators to the establishment of protected areas: A case study of tigers, leopards and their prey in Bardia National Park, Nepal". Biological Conservation 142 (1): 189–202. doi:10.1016/j.biocon.2008.10.020. Bibcode: 2009BCons.142..189W. https://www.researchgate.net/publication/222562975. 
  38. Prachi, M. & Kulkarni, J. (2006). Monitoring of Tiger and prey population dynamics in Melghat Tiger Reserve, Maharashtra, India (Report). Pune: Envirosearch.
  39. Dutta, P. (2008). "Trouble for rhino from poacher and Bengal tiger". The Telegraph India இம் மூலத்தில் இருந்து 27 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140927093927/http://www.telegraphindia.com/1080313/jsp/northeast/story_9012303.jsp. 
  40. Huckelbridge, D. (2019). No Beast So Fierce. New York: HarperCollins Publishers. pp. 19–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780062678843.
  41. Mukherjee, S.; Sarkar, N. S. (2013). "The range of prey size of the Royal Bengal Tiger of the Sundarbans". Journal of Ecosystems 2013: 3–5. doi:10.1155/2013/351756. 
  42. Pandit, P. K. (2012). "Sundarban Tiger − a new prey species of estuarine crocodile at Sundarban Tiger Reserve, India". Tigerpaper XXXIX (1): 1–5. http://www.fao.org/3/a-am998e.pdf. 
  43. Melvin E. Sunquest. The Social Organization of Tigers (panthera tigris) in Royal Chitawan National Park, Nepal. Smithsonian contributions to zoology. No.336
  44. Mazak, V. (1996). Der Tiger : Panthera tigris. Magdeburg, Heidelberg, Berlin, Oxford: Westarp Wissenschaften. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89432-759-0.
  45. Brander, A. A. D. (1923). Wild Animals in Central India. London: Edwin Arnold & Co.
  46. Sanderson, G. P. (1912). Thirteen years among the wild beasts of India: their haunts and habits from personal observations; with an account of the modes of capturing and taming elephants. Edinburgh: John Grant.
  47. Schaller, G. (1967). The Deer and the Tiger: A Study of Wildlife in India. Chicago: Chicago University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226736570.
  48. Hemley, G. & Mills, J. A. (1999). "The beginning of the end of tigers in trade?". In Seidensticker, J.; Christie, S. & Jackson, P. (eds.). Riding the Tiger: Tiger Conservation in Human-Dominated Landscapes. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64835-6.
  49. Banks, D.; Lawson, S. & Wright, B. (2006). Skinning the Cat: Crime and Politics of the Big Cat Skin Trade (PDF) (Report). London: Environmental Investigation Agency, Wildlife Protection Society of India.
  50. Saif, S.; Rahman, H. M. T.; MacMillan, D. C. (2016). "Who is killing the tiger Panthera tigris and why?". Oryx 52: 1–9. doi:10.1017/S0030605316000491. 
  51. Saif, S.; Russell, A. M.; Nodie, S. I.; Inskip, C.; Lahann, P.; Barlow, A.; Barlow Greenwood, C.; Islam, M. A. et al. (2016). "Local usage of Tiger parts and its role in Tiger killing in the Bangladesh Sundarbans". Human Dimensions of Wildlife 21 (2): 95–110. doi:10.1080/10871209.2015.1107786. Bibcode: 2016HDW....21...95S. 
  52. McDougal, C. (1987). "The man-eating tigers in geographical historical perspective". In Tilson, R. L.; Seal, U. S. (eds.). Tigers of the World: The Biology, Biopolitics, Management, and Conservation of an Endangered Species. New Jersey: Noyes Publications. pp. 435–448. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1133-5.
  53. Jnawali, S.R.; Baral, H.S.; Lee, S.; Acharya, K.P.; Upadhyay, G.P.; Pandey, M.; Shrestha, R.; Joshi, D.; Laminchhane, B.R.; Griffiths, J.; Khatiwada, A.P.; Subedi, N. & Amin, R. (2011). "Panthera tigris (Mazak, 1968), Subspecies Panthera tigris tigris (Linnaeus, 1758)". The Status of Nepal Mammals (PDF). The National Red List Series. Kathmandu, Nepal: Department of National Parks and Wildlife Conservation. pp. 73–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780900881602.
  54. "Fauna of India" (PDF).
  55. Panwar, H. S. (1987). "Project Tiger: The reserves, the tigers, and their future". In: Tilson, R. L., Seal, U. S., Minnesota Zoological Garden, IUCN/SSC Captive Breeding Group, IUCN/SSC Cat Specialist Group. Tigers of the world: the biology, biopolitics, management, and conservation of an endangered species. Noyes Publications, Park Ridge, N.J., pp. 110–117, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0815511337.
  56. Background. National Tiger Conservation Authority, Government of India
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளப்_புலி&oldid=3939019" இலிருந்து மீள்விக்கப்பட்டது