சத்யமேவ ஜெயதே
சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும், ஆங்கில மொழி: Truth alone triumphs) என்பது முண்டக உபநிடத்தின் புகழ்பெற்ற ஒரு மந்திரத்தின் ஒரு பகுதியாகும்.[1] இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, 26 சனவரி 1950 அன்று, இந்தியா குடியரசாக மாறிய நாளில் இந்திய தேசிய குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2][3]
இது அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியின் அடிவாரத்தில் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, இந்திய தேசிய இலச்சினையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. அனைத்து இந்திய ரூபாய்களிலும், தேசிய ஆவணங்களிலும் சின்னம் மற்றும் "சத்யமேவ ஜெயதே" என்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
தோற்றம் மற்றும் பொருள்
[தொகு]இக்குறிக்கோள் முண்டக உபநிடதத்தில் 3.1.6வது மந்திரத்தில் உள்ளது. மந்திரமும் மொழிபெயர்ப்பும் பின்வருமாறு:
- தேவநாகரி எழுத்துமுறையில்
सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत् सत्यस्य परमं निधानम्॥[1]
- எழுத்துப்பெயர்ப்பு
- ஆங்கிலத்தில்
satyameva jayate nānṛtaṃ
satyena panthā vitato devayānaḥ
yenākramantyṛṣayo hyāptakāmā
yatra tat satyasya paramaṃ nidhānam[4]
- தமிழில்
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம்
ஸத்யேன பந்தா2 விததோ தே3வயான: ।
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா:
யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ॥[5]
- மொழிப்பெயர்ப்பு
சுவாமி குருபரானந்தர் வழங்கிய தமிழ் உரை:
வாய்மையே வெல்லும். பொய்மை வெல்லாது. எந்த ப்ரஹ்ம லோகத்தில் ஸத்யத்தினால் அடையப்படும் அந்த மேலான லக்ஷ்யம் உண்டோ.
அந்த லோகத்தை ஆசைகள் நீங்கிய ரிஷிகள் எந்தப் பாதையினால் அடைகிறார்களோ, அந்த ஒளி பொருந்திய பாதை ஸத்யத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.[5]
தமிழ்நாடு அரசு இலச்சினையில் தமிழாக்கம்
[தொகு]இந்தியா விடுதலை அடைந்த பிறகு, இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்நாடு அரசு இலச்சினையில் தேவநாகரி எழுத்தில் "சத்யமேவ ஜெயதே" என இருந்தது, இதை "வாய்மையே வெல்லும்" என்று 1967ஆம் ஆண்டு கா. ந. அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலத்தில் மாற்றப்பட்டது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Mundaka Upanishad". IIT Kanpur. Archived from the original on 4 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
- ↑ "Motto for State Emblem" (PDF). Press Information Bureau of India - Archive. Archived from the original (PDF) on 8 August 2017. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
- ↑ Department related parliamentary standing committee on home affairs (2005-08-25). One hundred and sixteenth report on the state emblem of India (Prohibition of improper use) Bill, 2004. New Delhi: Rajya Sabha Secretariat, New Delhi. p. 6.11.1. http://164.100.47.5/book2/reports/home_aff/116threport.htm. பார்த்த நாள்: 2008-09-26.
- ↑ "The Mundaka Upanishad with Shankara's Commentary". Wisdom Library. 21 February 2016. Archived from the original on 26 June 2020. பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
- ↑ 5.0 5.1 ஸ்வாமி குருபரானந்த. https://archive.org/details/UpanishadsTamil/02_Mundaka_Upanishad/. உபநிஷத்துக்கள். p. 59, 60.
{{cite book}}
:|chapter-url=
missing title (help); Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ "பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகம்". செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னெடுப்பு. பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.
- ↑ ரா. அரவிந்தராஜ் (2021-05-03). "Long Read - திமுக: அரை நூற்றாண்டுகள் கடந்தும் அழிக்க முடியாத அரசியல் அஞ்சான்! #TNelections2021". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.