காந்தி ஜெயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தி ஜெயந்தி
Portrait Gandhi.jpg
கடைபிடிப்போர்இந்தியா
முக்கியத்துவம்இந்திய விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தியின் பிறந்த நாள்
அனுசரிப்புகள்வரலாற்று கொண்டாட்டங்கள்
நாள்2 அக்டோபர்
நிகழ்வுஆண்டுக்கு ஒருமுறை
தொடர்புடையனஅனைத்துலக வன்முறையற்ற நாள்
குடியரசு நாள்
இந்தியாவின் விடுதலை நாள்

காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அனுசரிக்கப்பட்டு) வருகிறது.[1]

நூற்பு வேள்வி[தொகு]

காந்தி ஜெயந்தி: 24 மணி நேர நூற்பு வேள்வி காந்தியடிகள் தமது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், தலைவர்கள் பலர் வற்புறத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. [2] [3]

திரு ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பயன்படுத்திய பெட்டிராட்டை

1969 அக்டோபர் 2 அன்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வி -ரா. கிருஷ்ணசாமி நாயுடு- <--பங்குபெற்ற நிகழ்வு.

கொண்டாட்டம்[தொகு]

காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

காந்தி ஜெயந்தி அன்று புது தில்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. கல்லூரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக-அரசியல் நிறுவனங்கள் வெவ்வேறு நகரங்களில் நினைவு விழாக்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்றவைகள் பிரபலமான நடவடிக்கைகளில் அடங்கும். ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன மற்றும் பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியின் முயற்சியைக் கொண்டாடுவதற்கும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.[4] காந்தியின் விருப்பமான பஜனைகள் (இந்து பக்திப் பாடல்), ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்) பொதுவாக அவரது நினைவாக பாடப்படுகிறது. [5] நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படும். மேலும் சிலர் அன்றைய தினம் மது அருந்துவதையோ அல்லது இறைச்சி சாப்பிடுவதையோ தவிர்க்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் .[6]

காந்தி ஜி 150 வது ஆண்டுவிழா நிகழ்வுகள்[தொகு]

மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது வரலாற்றை உருவாக்குவது போல அவருக்கு வேறு வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய இரயில்வே மண்டலம் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ஆண்டை மூவர்ணத்தின் பின்னணியில் மகாத்மா காந்தியின் படத்துடன் டீசல் என்ஜின்களை வரைந்து கொண்டாடியது. [7]

காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நமது மதிப்புமிகு பிரதமர் அவரது 150 வது பிறந்தநாளில் ₹ 150 க்கான நாணயத்தை வெளியிட்டுள்ளார்.[8] காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியின் பார்வையை முன்னெடுக்க காங்கிரசு தொழிலாளர்கள் கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கட்சியின் நாடு தழுவிய 'காந்தி சங்கல்ப் யாத்திரை'யை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாலையில், குசராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி 10,000 சர்பஞ்ச்களுக்கிடையே உரையாற்றினார். இந்தியாவை 'திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத தேசம்' என்றும், சுவச் பாரத் திட்டத்தின் வெற்றி என்றும் அறிவித்து, பிளாஸ்டிக்கிற்கு எதிரான போரைத் தொடங்கினார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அவரது பங்களிப்பைக் குறிக்கும் வகையில் ‘காந்திக்கான பட அஞ்சலட்டைகள்’ என்ற கண்காட்சியை ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் எம்.எஃப். உசைன் கலைக் கூடம் ஏற்பாடு செய்தது. கலைக் கண்காட்சியை பேராசிரியர் பர்கத் பசீர் கான் வடிவமைத்து நடத்தினார். [9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chaudhury, Nilova (ஜூன் 15 2007). "October 2 is global non-violence day". hindustantimes.com (Hindustan Times). Archived from the original on 2007-09-30. https://web.archive.org/web/20070930061449/http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int%27l+Non-Violence+Day. பார்த்த நாள்: 2007-06-15. 
  2. தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "தினமணி". 2012-01-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-20 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Gandhi Jayanti". Simon Fraser University. 15 April 2006 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Several programmes mark Gandhi Jayanti celebrations in Mysore". தி இந்து. Archived from the original on 17 பிப்ரவரி 2006. https://web.archive.org/web/20060217213403/http://www.hindu.com/2005/10/03/stories/2005100311220300.htm. பார்த்த நாள்: 16 November 2006. 
  6. "Mahatma Gandhi Jayanti in India". Time and Date. 1 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. "indian-railways-pays-unique-tribute-to-mahatma-gandhi-on-his-150th-birth-anniversary-year". www.livemint.com. 9 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  8. "PM Modi releases commemorative Rs 150 coins on Mahatma Gandhi's birth anniversary". www.indiatoday.in. 9 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  9. "postcard-exhibition-depicts-gandhi-s-ideas-of-environment-conservation". wap.business-standard.com. 12 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  10. "The exhibition was conceived, designed and curated by Prof. Farhat Basir Khan". www.outlookindia.com. 12 October 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_ஜெயந்தி&oldid=3549123" இருந்து மீள்விக்கப்பட்டது