மகாத்மா காந்தி வரிசை
காந்தி வரிசை (Gandhi Series) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்திய ரூபாய் பணத்தாள்கள் ஆகும். இந்த பணத் தாள்களில் முதன்மையாக மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெற்றதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த வரிசை 1996 க்கு முன்பாக வழக்கிலிருந்த அனைத்து பணத்தால்களின் வடிவத்தையும் மாற்றி இந்த வரிசை இடம்பிடித்தது. இந்திய ரிசர்வ் வங்கி 1996 இல் தொடங்கி 10 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இந்த வரிசையில் அறிமுகப்படுத்தியது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி இந்த வரிசையில் உள்ள 500 மற்றும் 1000 பணத்தாள்களின் மதிப்பு நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதியதாக 500 மற்றும் 2000 மதிப்பலான மகாத்மா காந்தி புதிய வரிசை நோட்டுகள் வெளியிடப்பட்டன.
பணத்தாள்கள்[தொகு]
மகாத்மா காந்தி வரிசை[1] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
படம் | மதிப்பு | அளவு | தாள் நிறம் | விளக்கம்D | காலகட்டம் | |||||
முன்பக்கம் | பின்பக்கம் | முன்பக்கம் | பின்பக்கம் | வாட்டர்மார்க் | வெளியீடு | திரும்பப்பெற்றது | ||||
₹5 | 117 × 63 மிமீ | பச்சை | மகாத்மா காந்தி | உழவு இயந்திரம் | மகாத்மா காந்தி | 2002 / 2009 | நடப்பில் | |||
₹10 | 137 × 63 mm | ஆரஞ்சு-ஊதா | காண்டாமிருகம், யானை, புலி | 1996 / 2006 | நடப்பில் | |||||
₹20 | 147 × 63 மிமீ | Red-ஆரஞ்சு | ஹாரிட் மலை, போர்ட் பிளேர் | 2001 / 2006 | நடப்பில் | |||||
₹50 | 147 × 73 மிமீ | ஊதா | இந்திய நாடாளுமன்றம் | 1997 / 2005 | நடப்பில் | |||||
₹100 | 157 × 73 மிமீ | மையத்தில் நீலம்-பச்சை, 2 புறம் பழுப்பு-ஊதா | இமயமலை | 1996 / 2005 | நடப்பில் | |||||
₹500 | 167 × 73 மிமீ | ஆரஞ்சு மற்றும் மஞ்சள் | உப்புச் சத்தியாகிரகம் | 2000 / 2005 | 8 நவம்பர் 2016 | |||||
₹1000 | 177 × 73 மிமீ | அம்பர்-சிவப்ப் | இந்தியாவின் பொருளாதாரம் | 2000 / 2005 | 8 நவம்பர் 2016 |
மொழிகள்[தொகு]
ஒவ்வொரு பணத்தாளிலும் 17 மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றன. மொழிகளின் வரிசை பின்வறுமாறு அசாமிய மொழி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி மொழி, கொங்கணி மொழி, மலையாளம், மராத்திய மொழி, நேபாளி மொழி, ஒடியா மொழி, பஞ்சாபி மொழி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.
இந்திய ஒன்றிய அலுவல் மொழிகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
மொழிகள் | ₹5 | ₹10 | ₹20 | ₹50 | ₹100 | ₹500 | ₹1000 | |
ஆங்கிலம் | ஐந்து ரூபாய் | பத்து ரூபாய் | இருபது ரூபாய் | ஐம்பது ரூபாய் | நூறு ரூபாய் | ஐநூறு ரூபாய் | ஆயிரம் ரூபாய் | |
இந்தி | पाँच रुपये | दस रुपये | बीस रुपये | पचास रुपये | एक सौ रुपये | पांच सौ रुपये | एक हज़ार रुपये | |
இந்தியாவின் அலுவல் மொழிகள் 15 | ||||||||
அசாமிய மொழி | পাঁচ টকা | দহ টকা | বিছ টকা | পঞ্চাশ টকা | এশ টকা | পাঁচশ টকা | এহেজাৰ টকা | |
வங்காள மொழி | পাঁচ টাকা | দশ টাকা | কুড়ি টাকা | পঞ্চাশ টাকা | একশ টাকা | পাঁচশ টাকা | এক হাজার টাকা | |
குசராத்தி | પાંચ રૂપિયા | દસ રૂપિયા | વીસ રૂપિયા | પચાસ રૂપિયા | સો રૂપિયા | પાંચ સો રૂપિયા | એક હજાર રૂપિયા | |
கன்னடம் | ಐದು ರುಪಾಯಿಗಳು | ಹತ್ತು ರುಪಾಯಿಗಳು | ಇಪ್ಪತ್ತು ರುಪಾಯಿಗಳು | ಐವತ್ತು ರುಪಾಯಿಗಳು | ನೂರು ರುಪಾಯಿಗಳು | ಐನೂರು ರುಪಾಯಿಗಳು | ಒಂದು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು | |
காஷ்மீரி | پاژشھ رۄپے | دہ رۄپے | وھ رۄپے | پاژاھ رۄپے | ھطم رۄپے | پاژشھ ھطم رۄپے | ساس رۄپے | |
கொங்கணி | पांच रुपया | धा रुपया | वीस रुपया | पन्नास रुपया | शंबर रुपया | पाचशें रुपया | एक हजार रुपया | |
மலையாளம் | അഞ്ചു രൂപ | പത്തു രൂപ | ഇരുപതു രൂപ | അൻപതു രൂപ | നൂറു രൂപ | അഞ്ഞൂറു രൂപ | ആയിരം രൂപ | |
மராத்தி | पाच रुपये | दहा रुपये | वीस रुपये | पन्नास रुपये | शंभर रुपये | पाचशे रुपये | एक हजार रुपये | |
நேபாளி | पाँच रुपियाँ | दस रुपियाँ | बीस रुपियाँ | पचास रुपियाँ | एक सय रुपियाँ | पाँच सय रुपियाँ | एक हजार रुपियाँ | |
ஒடியா | ପାଞ୍ଚ ଟଙ୍କା | ଦଶ ଟଙ୍କା | କୋଡିଏ ଟଙ୍କା | ପଚାଶ ଟଙ୍କା | ଏକ ଶତ ଟଙ୍କା | ପାଞ୍ଚ ଶତ ଟଙ୍କା | ଏକ ହଜାର ଟଙ୍କା | |
பஞ்சாபி | ਪੰਜ ਰੁਪਏ | ਦਸ ਰੁਪਏ | ਵੀਹ ਰੁਪਏ | ਪੰਜਾਹ ਰੁਪਏ | ਇਕ ਸੌ ਰੁਪਏ | ਪੰਜ ਸੌ ਰੁਪਏ | ਇਕ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ | |
சமசுகிருதம் | पञ्चरूप्यकाणि | दशरूप्यकाणि | विंशती रूप्यकाणि | पञ्चाशत् रूप्यकाणि | शतं रूप्यकाणि | पञ्चशतं रूप्यकाणि | सहस्रं रूप्यकाणि | |
தமிழ் | ஐந்து ரூபாய் | பத்து ரூபாய் | இருபது ரூபாய் | ஐம்பது ரூபாய் | நூறு ரூபாய் | ஐந்நூறு ரூபாய் | ஆயிரம் ரூபாய் | |
தெலுங்கு | ఐదు రూపాయలు | పది రూపాయలు | ఇరవై రూపాయలు | యాభై రూపాయలు | నూరు రూపాయలు | ఐదువందల రూపాయలు | వెయ్యి రూపాయలు | |
உருது | پانچ روپے | دس روپے | بیس روپے | پچاس روپے | ایک سو روپے | پانچ سو روپے | ایک ہزار روپے |
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Reserve Bank of India — Bank Notes". Rbi.org.in. மூல முகவரியிலிருந்து 26 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 November 2011.