உள்ளடக்கத்துக்குச் செல்

2 பைசா (இந்திய நாணயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டு பைசா
Two paise
दो पैसे
மதிப்புஇந்திய ரூபாயில் 2100
Mass2.95 g
விட்டம்18 mm (0.71 in)
தடிமன்1.80 mm (0.071 in)
முனைSmooth
Compositionசெப்புநிக்கல்
Years of minting1964 (1964)
Mint marksமும்பை = ♦
Circulationசெல்லாக்காசாக்கப்பட்டது (1979)
Catalog numberKM#12
Obverse
வடிவமைப்புஇந்திய தேசிய இலச்சினையுடன் நாட்டுப் பெயர்.
Reverse
Designநாணய மதிப்பு மற்றும் அச்சடிக்கப்பட்ட ஆண்டு

இரண்டு பைசா (Two paise (இந்தி: दो पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2100 ஆகும். பைசாவின் சின்னம் p.

வரலாறு

[தொகு]

1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3]

நாணய அடிப்பு

[தொகு]

இரண்டு பைசா நாணயங்கள் 1964 ஆண்டுமட்டும் அச்சிடப்பட்டன. இவை மும்பையிலுள்ள இந்திய அரசு காசாலையில் அச்சிடப்பட்டன. மற்றும் ஆலையின் சிறிய அடையாளமாக ♦ (சிறிய புள்ளி / வைரம்) இடப்பட்டது. இந்த நாணயம் 1979 ஆம் ஆண்டில் செல்லாததாக்கப்பட்டது.[4]

மொத்த காசுகள்

[தொகு]

மொத்தம் 1964 ஆம் ஆண்டு 323,504,000 காசுகள் அச்சிடப்பட்டன.

நாணயம்

[தொகு]

இரண்டு பைசா நாணயங்கள் செம்புநிக்கல் கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. காசின் எடை 2.95 கிராம்கள், அதன் விட்டம் 18 மில்லிமீட்டர்கள் (0.71 அங்), கனம் 1.8 மில்லிமீட்டர்கள் (0.071 அங்). நாணத்தின் விளிம்பில் எட்டு குவிபுடைப்புகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2 paise coins". India Numismatics. https://en.numista.com/catalogue/pieces10685.html. பார்த்த நாள்: 21 August 2017. 
  2. "Republic India Coinage". Reserve Bank of India. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 21 August 2017. 
  3. "History of Indian coins". India Numismatics. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 21 August 2017. 
  4. "2 Paise". colnect.com. http://colnect.com/en/coins/list/variant/2100. பார்த்த நாள்: 21 August 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2_பைசா_(இந்திய_நாணயம்)&oldid=2462906" இலிருந்து மீள்விக்கப்பட்டது