1 நயா பைசா (இந்திய நாணயம்)
ஒரு நயாபைசா (ஆங்கிலம்: One Naya paisa, இந்தி: एक नया पैसा), என்பது இந்திய ரூபாய்க்கு உட்பட்ட ஒரு நாணயம் ஆகும். இது இந்திய ஒரு ரூபாயில் 1⁄100 (நூறில்-ஒரு பங்கு) அலகு ஆகும். பைசாவின் சின்னம் p. 1955 ஆம் ஆண்டில், மெட்ரிக் முறைமைக்கு ஏற்ப இந்திய நாணய முறை, "இந்திய நாணயச் சட்டம்" மூலம் திருத்தப்பட்டது. இதன் பின்னர், புதிய ஒரு பைசா நாணயங்கள் 1957 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் 1964 வரை, ஒரு பைசா நாணயம் "நயா பைசா" (இந்தி: नया पैसा) (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டு, "ஒரு பைசா" என்றே அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஒரு பைசா சட்டப்படி செல்லாக் காசாக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாய் ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி ஒரு பைசா நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை இந் நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டு "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. நயா பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2] நயா பைசா நாயணயங்கள் 2011 சூன் 30 இல் செல்லாமல் ஆக்கப்பட்டன.[3]
வகைகள்
[தொகு]வகைகள் (1957-1963). | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
படம் | மதிப்பு | தொழில்நுட்ப அளவீடுகள் | விளக்கம் | அச்சிடப்பட்ட ஆண்டு | தற்போதைய நிலை | |||||||
முன்பக்கம் | பின்பக்கம் | எடை | விட்டம் | கனம் | உலோகம் | முனை | முன்பக்கம் | பின்பக்கம் | முதல் | கடைசி | ||
1 நயா பைசா |
1.5 கி | 16 மிமீ | 1.0 மிமீ | வெண்கலம் | Plain | இந்திய தேசிய இலச்சினை & நாட்டுப் பெயர் இந்தியிலும் ஆங்கிலத்திலும். |
மதிப்பு மற்றும் ஆண்டு. | 1957 | 1962 | செல்லாததாக்கப்பட்டது.[4] | ||
1.51 கி | 16 மிமீ | 1.1 மிமீ | நிக்கல்வெண்கலம் | Smooth | 1962 | 1963 | செல்லாததாக்கப்பட்டது.[5] |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Republic India Coinage". இந்திய ரிசர்வ் வங்கி. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 30 நவம்பர் 2016.
- ↑ "1 paisa coin". India Numismatics. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 30 நவம்பர் 2016.
- ↑ "Currency Matters". இந்திய ரிசர்வ் வங்கி. https://www.rbi.org.in/scripts/BS_CurrencyFAQView.aspx?Id=39. பார்த்த நாள்: 30 நவம்பர் 2016.
- ↑ "1961 Naya paisa". numista.com. http://en.numista.com/catalogue/pieces5494.html. பார்த்த நாள்: 30 நவம்பர் 2016.
- ↑ "Nickel-brass Naya paisa". numista.com. http://en.numista.com/catalogue/pieces7802.html. பார்த்த நாள்: 30 நவம்பர் 2016.