இந்திய அரசு காசாலை, ஐதராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசு காசலை, ஐதராபாத் (India Government Mint, Hyderabad) என்பது இந்தியாவில் உள்ள நான்கு காசாலைகளில் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான தெலுங்கானாவில் செரல்பாலி, செகந்தராபாத் (ஐதராபாத்தின் இரட்டை நகரங்கள்) ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆலை  1803 ஆம் ஆண்டில் ஐதராபாத் நிஜாமின் அரசு காசாலையாக நிறுவப்பட்டது. இந்த காசாலையை நிறுவியவர்கள்   மிர் அக்பர் அலி கான் சிகந்தர் ஜாக், ஆசாப் ஜாக் III ஆகியோராவர். முதலில் ஐதராபாத் நகரின் மொகல்புரா புறநகரான சுல்தான் சஹியில் இது அமைக்கப்பட்டது. 1950 இல் இந்த ஆலை இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஆலையானது 1997 ஆம் ஆண்டு  செர்லாப்பள்ளியில் உள்ள சிகந்தராபாத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த ஆலையில் 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.[1][2]

ஆலைக் குறியீடு[தொகு]

ஐதராபாத் காசாலையில் தயாரிக்கப்பட்ட நாணயம் என்பதைக் குறிக்கும்விதமாக, ஐந்துமுனை நட்சத்திரச் என்ற சின்னம் (*) இந்த ஆலையில் அச்சிடப்படும் நாணயங்களில் குறிக்கப்படுகிறது.[3]

தயாரிப்பு[தொகு]

இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 700 மில்லியன் நாணயங்கள். இதை 950 மில்லியன் நாணயங்களாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு இந்திய ரூபாய் நாணயங்கள் (1, 2, 5 & 10) அச்சிடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile". Official website. http://igmhyderabad.spmcil.com/Interface/AboutIGMH.aspx. பார்த்த நாள்: 9 January 2017. 
  2. "Coins". Reserve Bank of India. https://www.rbi.org.in/scripts/ic_coins.aspx. பார்த்த நாள்: 9 January 2017. 
  3. "Mint mark". numista.com. https://en.numista.com/catalogue/pieces24942.html. பார்த்த நாள்: 9 January 2017.