சிங்க வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்க வரிசை என்பது இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலாக வெளியிட்ட பணத்தாள் வரிசையாகும். பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற பிறகு சுதந்திர இந்தியா இந்தப் பணத்தாள் வரிசையை வெளியிட்டது. அதன் பிறகு மகாத்மா காந்தி வரிசை வெளியிடும் வரை இந்த சிங்க வரிசை புழக்கத்தில் இருந்தது.

முதன் முதலாக இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு ரூபாய் பணத்தாள் அச்சிடப்பட்டது.[1][2]

சிங்க இலட்சனை[தொகு]

சுதந்திர இந்திய அரசாங்கம் தன்னுடைய இலட்சனையாக நான்கு சிங்கங்கள் உள்ள அசோகரின் தூணை ஏற்றுக்கொண்டது. அந்த தூணில் நான்கு சிங்கங்கள் நான்கு திசையை நோக்கியவாறு அமைந்திருக்கும். சின்னத்தில் நடுநிலையாக ஒரு சிங்கம் நேராக பார்க்கும்படியும், மற்ற இரு சிங்கங்கள் அதன் இரு புறமும் வேறு திசையை நோக்கியவாறும் அமைந்திருக்கும். நான்காவது சிங்கம் பின்புறமாக இருப்பதால் இலட்சனையில் அச்சிங்கம் தெரியாது. இந்த சிங்க அமைப்பின் கீழே அசோக சக்கரமும், சக்கரத்தின் வலது புறம் ஓடும் குதிரையும், இடதுபுறம் ஓடும் காளையும் அமைந்திருக்கும்.

காட்சியகம்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "The Journey Of Indian Currency Since 1947 To The Present". Noise Break. 14 November 2016.
  2. "The History of the Indian Currency Notes and its Evolution". Jagranjosh.com. 30 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க_வரிசை&oldid=2996202" இலிருந்து மீள்விக்கப்பட்டது