மகாத்மா காந்தி புதிய வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[1] நவம்பர் 10, 2016 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் இவ்வரிசையின் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.

இதற்குமுன் பயன்பாட்டில் இருந்த மகாத்மா காந்தி வரிசையின் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என நவம்பர் 8, 2016ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்ததைத் தொடர்ந்து, அதிக பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட மகாத்மா காந்தி புதிய வரிசையைச் சார்ந்த 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.[2]

இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[3][4]

இப்புதிய வரிசையைச் சேர்ந்த 1000, 100 மற்றும் 50 ரூபாய் தாள்கள் வரும் மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]

ரூபாய் தாள்கள்[தொகு]

மகாத்மா காந்தி புதிய வரிசை
படம் மதிப்பு அளவு முதன்மை நிறம் விளக்கம் வெளியிடப்பட்ட நாள்
முன்புறம் பின்புறம் முன்புறம் பின்புறம் நீர்வரிக்குறி
noframe noframe [[இந்திய 500 ரூபாய் தாள்|Indian Rupee symbol.svg500]] 66 × 150 மி.மீ கற்சாம்பல் நிறம் மகாத்மா காந்தி செங்கோட்டை மகாத்மா காந்தி 10 நவம்பர் 2016
noframe noframe [[இந்திய 2000 ரூபாய் தாள்|Indian Rupee symbol.svg2000]] 66 × 166 மி.மீ ஒண் சிவப்பு நிறம் மங்கள்யான் 10 நவம்பர் 2016

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு". இந்திய ரிசர்வ் வங்கி (8 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.
  2. "கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு". தி இந்து (8 நவம்பர் 2016). பார்த்த நாள் 15 நவம்பர் 2016.
  3. "500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது". இந்துஸ்தான் டைம்ஸ் (9 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.
  4. "புதிய 500, 2000 ரூபாய் தாள்கள்". தி எக்கணாமிக் டைம்ஸ் (9 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.
  5. "புதிய 1000, 100 மற்றும் 50 ரூபாய் தாள்கள்". தி இந்து பிசினஸ் லைன் (10 நவம்பர் 2016). பார்த்த நாள் 15 நவம்பர் 2016.